லட்சத்தீவு சென்ற மோடி:


இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், "லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புள்ளதாக எனது மாலத்தீவு பயணம் அமைந்தது.


லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்காக நன்றி கூறுகிறேன். லட்சத்தீவில் மேம்பட்ட வளர்ச்சியின் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த சுகாதாரம், வேகமான இணையம், குடிநீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தவதோடு, உள்ளூர் கலாச்சாரத்தை பாதுகாத்து கொண்டாடுவதும் அரசின் நோக்கமாக உள்ளது. லட்சத்தீவில் துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் இந்த உணர்வை பிரதிபலிக்கின்றன.


அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடும் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆரோக்கியம், தற்சார்பு, பெண்கள் முன்னேற்றம், விவசாய நடைமுறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை அறிந்தபோது அது ஊக்கமளிப்பதாக இருந்தது. நான் அங்கு கேட்டவை உண்மையில் வளர்ச்சி சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது என்பதையே.


லட்சத்தீவின் இயற்கை அழகும் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக எவ்வாறு உழைப்பது என்பது குறித்து சிந்திக்க இது எனக்கு வாய்ப்பளித்தது. சாகச வீரர்களைக் காணவும் அவர்களை அரவணைக்கவும் விரும்புபவர்கள், தங்களுக்கான பயணப் பட்டியலில் லட்சத்தீவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீருக்குள் மூழ்கி உள்ளே இருக்கும் இயற்கை காட்சிகளைக் காண்பதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டேன். அது ஓர் உற்சாகமான அனுபவம்.அழகிய கடற்கரைகளில் அதிகாலைப் பொழுதில் நடைபயணம் மேற்கொண்டது  பேரின்பத்தை அளித்தது" என்று கூறியிருந்தார்.



இந்நிலையில் பிரதம் நரேந்திர மோடி லட்சத்தீவுகள் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. 






இதனிடையே சின்ஹா என்ற எக்ஸ் பயனர் ஒருவார், “இது ஒரு சிறந்த நடவடிக்கை. மாலத்தீவின் கைப்பாவையான சீனா அரசிற்கு இது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும். மேலும், இது லட்சத்தீவின் (Lakshadweep) சுற்றுலாவை மேம்படுத்தும்” என்று கூறியிருந்தார்.


மாலத்தீவின் ஆளும் கட்சி உறுப்பினர் ஜாஹித் ரமீஸ்:


இவருடைய இந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக மாலத்தீவின் ஆளும் கட்சி உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் ஒரு பதிவை வெளிப்படுத்தியிருந்தார்.






அதில், “இந்த நடவடிக்கை மிகவும் சிறப்பானது. இருப்பினும், எங்களுடன் போட்டியிடும் எண்ணம் மாயையானது. நாங்கள் வழங்கும் சேவையை அவர்கள் எப்படி வழங்க முடியும்? ” என்று கூறியிருந்தார். இது நெட்டிசன்களிடம் பெரும் விவாத்தை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் பலரும் இந்தியர்களை ஜாஹித் ரமீஸ் அவமானபடுத்திவிட்டார் என்று கொந்தளித்தனர். இதனிடையே இந்தியர்கள் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதை நிறுத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர்.


இந்திய குடியுரிமை:



முன்னதாக, கடந்த ஜூன் 28 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு பதிவில், இந்திய குடியுரிமை கேட்டு வலியுறுத்தியுள்ளார் ஜாஹித் ரமீஸ். இதனிடையே அவருடைய இந்த பழைய பதிவையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.






இதனிடையே ஜாஹித் ரமீஸ் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “நான் இந்தியாவில் பிறந்தேன், FYI, நான் சட்டமியற்றுபவர் அல்ல. எனது எண்ணங்களை ட்வீட் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். குறிப்பாக உங்கள் மக்கள் எங்களை, முஸ்லிம்கள் மற்றும் பாலஸ்தீனத்தைப் பற்றி மிகவும் புண்படுத்தும் கருத்துக்கள் இருக்கும்போது, ​​ஏன் எதிர்வினை இருக்கிறது என்பது குழப்பமாக இருக்கிறது. எப்படியிருந்தாலும், நான் பொதுவாக கருத்து தெரிவிப்பதில்லை, எனவே இந்த ஒரு முறை, தயவுசெய்து சமாளிக்கவும்” என்று கூறியிருக்கிறார்.