Meghalaya Court: சிறார்களுக்கு இடையில் பரஸ்பர ஒப்புதலுடன் நடந்த உடலுறவு, போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கு எனக் கூற முடியாது என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேகாலயா மாநிலத்தின் தனியார் பள்ளி ஒன்றில் 2020 டிசம்பர் 11-ஆம் தேதி அன்று சிறுமி காணாமல் போனதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமி காணாமல் போனது குறித்து அவரது தாயார் உள்ளூர் காவல்நிலையில் புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில் சிறுமி தனது காதலனான உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. .மேலும் போலீசார் அவரை கண்டு பிடித்து, அந்த சிறுவன் மீது போக்சோ என்கிற குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அச்சிறுவன், 10 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த சிறுமி வாக்குமூலத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவருடன் தனக்கு உடல் ரீதியான உறவுகள் இருந்ததாகவும், சிறுமியின் சம்மதம் மற்றும் தனது சொந்த விருப்பத்திற்கு உட்பட்டுதான் உடலுறவு வைத்துக்கொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் மனுவை விசாரித்த மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதி டியெங்டோ கூறியதாவது, ”இதுபோன்ற சூழ்நிலைகளில், உறவில் இருந்த இருவர், பரஸ்பர புரிதலோடு உறவில் ஈடுபட்ட நிலையில், போக்சோ சட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும், குற்றம் சாட்டப்பட்ட சிறார் மீதான வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.