மேகாலயா முதல்வர் சங்மா பள்ளி மாணவர்களுக்கான ஷேர்டு பேருந்து திட்டத்தை தொடங்கிவைத்து தானும் பயணித்தார். பள்ளி மாணவர்களுக்கான இந்த ஷேர்டு பேருந்து திட்டம் மூலம் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெர்வித்துள்ளார்.


ஷேர்டு பேருந்து திட்டம்:


இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மேகாலயாவில் இன்று பள்ளி மாணவர்களுக்கான ஷேர்டு பள்ளிப் பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்தேன். இத் திட்டத்தால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் போக்குவரத்து எளிதாகும். போக்குவரத்து நெரிசலும் குறையும். இதனால் தனியார் 4 சக்கர வாகனங்களில் இருந்து இந்த ஷேர்டு பள்ளிப் பேருந்துகளுக்கு மாணவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பேருந்துகள் Sustainable Transport and Efficient Mobility Society (STEMS) நீடித்த நிலையான போக்குவரத்து மூலம் திறன்வாய்ந்த நடமாட்டம் கொண்ட சமூகத்தை உருவாக்க உதவும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் என்று கூறப்படும்.






இதேபோல் ஷேர்டு டூரிஸ்ட் வாகனங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இது மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும். இது சுற்றுலா வருபவர்களுக்கு எளிதான போக்குவரத்து சூழலை உருவாக்குவதோடு சுயதொழில் முனைவோருக்கு நல்ல வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும். மேகாலயா அரசு சுற்றுலா தொழில் முனைவோர் ப்ரீமியம் சுற்றுலா வாகனங்களை வாங்க நிதியுதவி செய்கிறது. இந்த ஷேர்டு வாகங்களால் சுற்றுச்சூழலும் பேணப்படும். இது மட்டுமல்லாமல் ப்ரைம் அக்ரிகல்சரல் ரெஸ்பான்ஸ் வெஹிக்கில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.


Prime Agriculture Response Vehicles திட்டம் மூலம் விவசாய சங்கங்களுக்கு நாங்கள் வாகனங்களை அளிப்போம். அடஹ்ன் மூலம் விவசாயிகள் பயனடைவர். விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை கொண்டு செல்ல வாகனங்களுக்கு செலவிடுவது வெகுவாகக் குறையும் என்றும் முதல்வர் கூறினார். கிராமப்புறங்களில் தொழில் முனைவோரையும் இத்திட்டம் ஊக்குவிக்கும் என்றார்.


ஜி.பி.எஸ். வசதி:


ஸ்டெம்ஸ் சிஇஓ இஷாவாண்டா லாலு கூறுகையில், இப்போது மேகாலயாவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளள இந்த ஷேர்டு பேருந்து திட்டம் மூலம் பல பள்ளிகளும் பலமுறை ஸ்கூல் ட்ரிப் மேற்கொள்ளலாம். அதே பேருந்துகளில் பின்னர் அலுவலக ஊழியர்கள் அலுவலகங்கள் செய்யலாம். வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதில் செல்லலாம். இந்தப் பேருந்துகளில் ஜிபிஎஸ் ரியல் டைம் ட்ராக்கிங் உள்ளது. NIC ஒரு மொபைல் அப்ளிகேஷன் மற்றும் இணையதளம் தொடங்கும். அதன்மூலம் பேருந்துகளை புக் செய்யலாம். பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் மேகாலயா அரசால் பயிற்றுவிக்கப்படுவார்கள் என்றார். இத்திட்டத்திற்கு மேகாலயா மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.