Watch Video | ஃபோனா? கிளியா? ஐபோன் ரிங்டோன்போல அச்சு அசலாக கத்தும் கிளி - வைரல் வீடியோ!
உலகப் புகழ்பெற்ற ஒரு ரிங்டோனை வாயில் வாசிக்கிறது ஒரு கிளி

பறவைகளில் பேசும் பறவை என்றால் உடனே நாம் கிளி என சொல்வோம். பெயரைச் சொல்வது, சில வார்த்தைகளை அதட்டலாக கூறுவது என பல கிளிகள் இணையத்தில் அவ்வப்போது வைரலாவதும் உண்டு.அதுபோல ஒரு கிளி உலகம் முழுவதுமே வைரலாகி வருகிறது. ஏனென்றால் அது குறிப்பிட்ட வார்த்தையை பேசாமல் உலகப் புகழ்பெற்ற ஒரு ரிங்டோனை வாயில் வாசிக்கிறது.
பிரபல ரிங்டோனான ஐ போனின் ரிங் டோனை தன் வாயால் அழகாக வாசிக்கிறது அந்த கிளி. Gucci என்ற அந்த கிளியை பூஜா மற்றும் ஹர்ஷித் வளர்த்து வருகின்றனர். தன் கிளியின் திறமையை ஊருக்கு எடுத்துச் சொல்லவே gucci_gowda_007 என்ற இன்ஸ்டா பக்கத்தையும் அவர்கள் நிர்வகித்து வருகிறார். அந்த வீடியோவில் சமத்து கிளி Gucciன் வீடியோக்கள் பல உள்ளன.
Just In




குறிப்பாக இந்த ஐபோன் ரிங்டோன்வீடியோவில் தன்னுடைய கிளியை மென்மையாக தடவிக் கொடுக்கிறார் அதன் உரிமையாளர். அதற்கு பதிலாக அந்த கிளி வாயில் ரிங்டோன் வாசிக்கிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ள பலரும் இது ஆச்சரியமாகவும், அழகாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்