தட்டமைக்குச் செலுத்தப்படும் பிசிஜி தடுப்பூசி குழந்தைகளில் கொரோனாவுக்கு எதிராக குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிசெய்வதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பூனேவைச் சேர்ந்த ஒரு கல்லூரி நடத்திய இந்த ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 


பூனேவைச் சேர்ந்த ஒரு கல்லூரி, ஒன்றிலிருந்து 17 வயது வரையிலான பிள்ளைகளில் போலியோ மற்றும் பிசிஜி மீசில்ஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களில் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டது. அவர்களில் ஒருவரில் மட்டும் பிசிஜி தடுப்பு மருந்து செலுத்தப்படவில்லை. இவர்களில் கொரோனாவுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி ஊசி செலுத்தப்பட்டவர்களில் 87 சதவிகிதம் வரை இந்தத் தடுப்பூசிகள் செயல்படுவதாகவும் அவர்களில் குறைந்த அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 






 


முன்னதாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முந்தைய நிலவரப்படி தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5000க்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது ஒரேநாளில் 5,104 பேரிலிருந்து 4,519 பேராக குறைந்துள்ளது. 1,15,98 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,519 ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 792 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 









கொரோனாவால் மேலும் 37 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,809 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 18 பேரும் தனியார் மருத்துவமனையில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,05,892ல் இருந்து 90,137 ஆக குறைந்துள்ளது.