தேசிய வாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட நடிகைக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல மராத்திய நடிகையான கேதகி சித்தாலே கடந்த மாதம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார் குறித்து சில கருத்துகளை பதிவிட்டார். அந்தப்பதிவில், “ நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள், நரகம் காத்துக் கொண்டிருக்கிறது” உள்ளிட்ட கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்தப்பதிவு வேறொருவரால் பதிவிடப்பட்டது என சொல்லப்பட்டது.
இந்தப்பதிவிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த தேசிய வாத காங்கிரஸை சேர்ந்த தலைவர்கள் பல்வேறு காவல்நிலையங்களில் அவரை கைது செய்ய வேண்டுமென புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து நடிகை மீது பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் 14 ஆம் தேதி காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து சிறையில் அடைக்கபட்ட நடிகை கேதகி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தானே நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகைக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்