Mann Ki Baat Highlights: பெண் சக்திக்கு சந்திரயான் 3 ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத்:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு இந்திய வாணொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று காலை 11 மணியளவில் 104வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
"பெண் சக்திக்கு சந்திரயான் 3 எடுத்துக்காட்டு”
அப்போது அவர் பேசியதாவது, ”நாட்டு மக்கள் அனைவரின் முயற்சியாலும் சந்திரயான் 3 மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. சந்திரயான் 3 வெற்றில் நமது விஞ்ஞானிகளுடன், மற்ற துறைகளும் முக்கியப் பங்காற்றியுள்ளன. சந்திராயான் 3 விண்கலம் தரையிறங்கி 3 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. இந்த வெற்றி மிக பெரியது.
இதுபற்றி எவ்வளவு பேசினாலும் மிகையாகாது. சந்திரயான் 3 வெற்றி இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. இந்த பணியில் பல பெண் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் திட்ட இயக்குநர் மற்றும் மேலாளார் போன்ற பல முக்கிய பொறுப்புகயை கையாண்டுள்ளனர். சந்திரயான் 3 வெற்றி பெண் சக்திக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தியாவில் பெண்கள் இப்போது விண்வெளிக்கு கூட சவால் விடுகின்றனர். தேசம் வளர்ச்சி அடைவதை இனி யாரால் தடுக்க முடியும்?” என்றார்.
"ஜி20 உச்சி மாநாட்டில் 40 நாடுகளின் தலைவர்கள்”
தொடர்ந்து பேசிய அவர், ”செப்டம்பரில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா முழுவதுமாக தயாராக உள்ளது. ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டதில் இருந்து உலக நாடுகளில் நமக்கு பெருமை கிடைத்துள்ளது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி நாட்டிற்கு பெருமை சேர்க்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
சீனாவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்கள், உலக அமைப்புகளின் தலைவர்கள் இந்தியா வருகின்றனர். டெல்லியில் நடக்கும் மாநாடு ஜி20 உச்சி மாநாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது" என்றார் பிரதமர் மோடி.