டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஞாயிற்று கிழமை ( நேற்று) கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று விசாரணைக்காக டெல்லி சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். 


இந்நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 4 வரை சிபிஐ காவலில் வைத்து, விசாரணை மேற்கொள்ள, டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்துள்ளப்பட்ட நிகழ்வானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மதுபான கொள்கை :


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிக்கு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.


அதனடிப்படையில், டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.


புகார்:


இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது. 


இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக மணிஷ் சிசோடியா, இன்று காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார்.


விசாரணயில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 4 வரை சிபிஐ காவலில் வைத்து, விசாரணை மேற்கொள்ள, டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.