Manipur Violence : மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. கலவரத்தில் குக்கி பிரிவைச் சேர்ந்த பழங்குடி பெண்கள் இரண்டு பேரை ரோட்டில் நிர்வாணமாக நடக்கவிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெண்களை நிர்வாணமாக நடக்கவிட்ட கொடூரம்


மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைள மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. மேலும், அவர்களை அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவம் மணிப்பூர்  தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காங்கபோக்பி மாவட்டத்தில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. 


இதுகுறித்து பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ITLF என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் குகி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்ததது. ஆனால் இந்த கொடூர சம்பவம் மே 4ஆம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின்,  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஸ்மிரிதி ராணி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


கலவரத்திற்கு காரணம் என்ன?


மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.


இந்த சூழலில்தான், மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வெடித்த வன்முறைதான் தற்போது வரை நீடிக்கும் கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இரண்டு மாதங்களாக தொடர்ந்து வரும் கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


Parliment Monsoon Session: பரபரப்பான அரசியல் சூழல்.. இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. நிறைவேற்றப்படும் மசோதாக்கள் என்னென்ன?


அவசரமாக தரையிறங்கியது சோனியா காந்தி பயணித்த விமானம்.. நடந்தது என்ன?