ராஜஸ்தான் மாநிலத்தை தேர்ந்தவர், சந்த்(35). இவர் மின் வாரியத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று (செப்டம்பர். 27) பணி முடிந்த உடன் தன்னுடன் பணியற்றி வரும் சக ஊழியர்களுடன் இரவு தூங்கி கொண்டு இருந்தார். இதனையடுத்து அவர் காலை வழக்கம் போல் எழுந்துள்ளார். அப்போது அவரின் விலா எலும்பில் லேசான வலியை உணர்ந்தார்.
அதனை அவர் அதனை கண்டு கொள்ளாமல், தூங்கிக் கொண்டிருந்த போது பூனை கிறி இருக்கக்கூடும் என்று நினைத்தார். தொடர்ந்து மீண்டும் அவர் தூங்கிவிட்டர். அவரது மற்ற அறை நண்பர்கள், தூங்கிக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய ஏழு மணி நேரம் கழித்து, அறையில் ஒருவர் சந்தின் வயிற்றுக்கு அருகில் ஒரு புல்லட் உறை இருப்பதைக் கண்டார்.
உடனே சந்த் அருகில் சென்று பார்த்த போது அவருக்கு ஏற்பட்டு இருக்கும் பூனை கீறல் அல்ல, அது துப்பாக்கிச் சூடு காயம் என்பதை உணர்ந்தார். உடனே சந்த்தை அவர் எழுப்பி அருகில் உள்ள மருத்துவமனைக்குச் அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் சந்த்தை எக்ஸ்ரே ஸ்கேன் செய்தனர்.
அப்போது அவரது உடலில் தோட்டா இருந்தது தெரிய வந்தது. தோட்டா சிக்கியதால் சந்த்தின், முக்கிய உறுப்புகள் கடுமையாக பதிக்கப்பட்டது. இதனையொட்டி சந்த்திற்கு, பொது மயக்க மருந்துகளின் கீழ் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. பிறகு செப்டம்பர் 17 ஆம் தேதி காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தோட்டாவை அகற்றினர். மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நரசீரம் மற்றும் வர்தராம் தேவாசி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர். சந்த் புல்லட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கேட்ட நெட்டிசன்கள், அது எப்படி ஒரு நபர் குண்டு பட்டது கூட தெரியாமல் ஒரு நபர் உறங்க முடிகிறது. அவரை யார் தூப்பாக்கியால் சூட்டார் என காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவரை வேண்டும் என்றே யாராவது கொலை செய்ய முயன்றனரா? அல்லது தெரியாமல் நடந்த விபத்தா என விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. அதே போல் எப்படி குண்டு வெடிப்பு சத்தமில்லாமல், இந்த சம்பவம் நடைபெற்று இருக்கும் என சந்த்தின் சக ஊழியர்கள் சந்தேகப்பட்டு வருகின்றனர்.
தூங்கி கொண்டு இருந்த மின் வாரிய ஊழியர் தூப்பாக்கியால் சுடப்பட்ட சக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும், இதை தாங்கும் சக்தி எப்படி அந்த இளைஞருக்கு கிடைத்தது, ‛வாட்ட மேன்’ என்று ஒரு தரப்பினர் புகழ்ந்து வருகின்றனர்.