திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற கூற்று உள்ளது. ஆனால் தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில் திருமணங்கள் பெரும்பாலும் மேட்ரிமோனி இணையதளங்கள் மூலம் நிச்சயிக்கப்பட்டு வருகின்றன. அந்த இணையதளத்தில் பல்வேறு நபர்கள் தங்களுடை விருப்பத்தை வெளியிடுவது வழக்கம். 


அந்த வகையில் ஒருவர் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவரின் விருப்பும் மிகவும் சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. அதாவது பெட்டர்ஹாஃப் என்ற திருமண வரன் இணையதளத்தில் ஒருவர் தன்னுடைய விருப்பத்தை குறிப்பிட்டுள்ளார். 


 






அதில் அவர் தனக்கு வரும் பெண்ணின் குணம் குறித்து பதிவிட்டுள்ளார். அதுவரை அந்த விருப்பம் சரியாக தான் இருக்கிறது. அதன்பின்னர் அவர் தனக்கு வரும் பெண்ணின் மார்பக அளவு மற்றும் இடுப்பு அளவு ஆகியவற்றை பதிவிட்டுள்ளார். அது பலரையும் மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நபரின் விருப்பத்தை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


அந்த ட்வீட்டில் அவர்,’பெண்களின் மார்பகங்கள் மற்றும் இடுப்பு அளவை குறிப்பிட்டு ஒருவர் தனக்கு வரன் தேடுகிறார். இது மிகவும் மோசமான செயல். இது நிச்சயம் உண்மையாக இருந்த இணையதளம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார். 


 






அவருடைய ட்வீட்டிற்கு பதிலாக பெட்டர்ஹாஃப் தளம் ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில், ’எங்களுடைய தரவு கொள்கை மற்றும் விதிகளை மீறிய காரணத்திற்காக இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளது. இப்படி ஒரு திருமண வரன் தேடும் தளத்தில் பெண்களின் உடல் அகங்கள் தொடர்பாக ஒருவர் தன்னுடைய விருப்பத்தை பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலரும் தங்களுடைய கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க: மீண்டும் கட்டணம் உயர்த்திய ஏர்டெல்: எல்லா பிளானிலும் 20-25% ஏற்றம்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!