வெறும் கைகளால் மெகா சைஸ் நாகப்பாம்பை மீட்டு அதனை வனத்திற்குள் விட்டுள்ளார் இளைஞர் ஒருவர். அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோவை வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் எந்தப் பகுதியில் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.






வீடியோவில் 15 அடி நீளம் கொண்ட் பாம்பு ஒன்று காருக்கு அடியில் ஒளிந்து கொள்கிறது. அதனை மீட்க பாம்பு மீட்பர் ஒருவர் வரவழைக்கப்படுகிறார். அவர் அசாதாரணமாக வெறுங் கைகளால் பாம்பை மீட்டுவிடுகிறார். பார்ப்பதற்கு பதற வைக்கும் வீடியோவைப் பகிர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி லாவகமாக பாம்பு மீட்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது போன்ற சாகசங்களை முறையான பயிற்சி இல்லாமல் செய்யாதீர்கள் என்றார்.


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் பாம்பென்றால் அத்துடன் ஒரு செல்ஃபி படம் பிடி என்பது புதுமொழி என ஆக்கியுள்ளனர் பாம்பு மீட்பர்கள். அண்மைக்காலமாக பாம்பு மீட்பர்கள் பாம்பைப் பிடிப்பதும் பின்னர் அத்துடன் படம் பிடிப்பது, கடி வாங்குவதும் வழக்கமான கதையாகி வருகிறது.


அப்படியொரு சம்பவத்தின் காட்சிகள் கொண்ட வீடியோக்கள் பல அவ்வப்போது வைரலாவது வழக்கம்.


அப்படியொரு சம்பவத்தின் காட்சிகள் கொண்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் நெட்டிசன் ஒருவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில் அந்த நபர் ஒரு ராஜ நாகத்தைப் பின் தொடர்கிறார்.அதனை முத்தமிட முயற்சிக்கிறார். இறுதியில் அதன் நெற்றியில் முத்தமும் இடுகிறார். காண்போரை அந்த வீடியோ பதறச் செய்கிறது. அவர் வேறு யாருமில்லை கேரளாவைச் சேர்ந்த பிரபல பாம்பு மீட்பர் வா வா சுரேஷ். அவர் இதுவரை 38000 பாம்புகளை மீட்டுள்ளார். 3000 முறை பாம்புக் கடியும் வாங்கியுள்ளார் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.






அண்மையில் அவர் பாம்பு மீட்கும்போது அது அவரது தொடையில் கடித்தது. இதனால் அவர் அபாயகட்டத்திற்குச் சென்று உயிர் பிழைத்துத் திரும்பினார். அப்போதே பாம்பு மீட்பர்கள் பற்றி நிறைய விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. விவாதப் பொருளாகவும் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.