2018 ஆம் ஆண்டு முதல் ஆயுதப் படையில் இருந்து தலைமறைவான ஒருவர், ராணுவ அதிகாரியாக நடித்து, திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனி வெப்சைட்டுகள் மூலம் சந்தித்த பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். சமீபத்தில் ஒரு பெண் காவல் துறையை அணுகி, பாட்டீல் என குறிப்ப்பிடப்பட்ட விவரம் கொண்ட ஒரு நபர் தன்னை திருமணம் செய்துகொள்வது போல் நடித்து, உடல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும், பின்னர் முன்களப் பணி எனக் கூறி தனது எண்ணை முடக்கியதாகவும் கூறியபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் சனிக்கிழமை புனே போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். அந்த நபர் பெல்காம் கானாபூரில் உள்ள கும்பத்கிரியில் வசிக்கும் பிரசாந்த் பௌராவ் பாட்டீல் (31) என அடையாளம் காணப்பட்டார். பாட்டீலை டிசம்பர் 1ஆம் தேதி வரை காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிங்ககாட் காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் தேவிதாஸ் கெவேரே பேசுகையில், "அவர் ஆயுதப் படையில் இருந்து தலைமறைவாகி இருக்கிறார், பிறகு 2018 முதல் பணிக்கு வரவில்லை. 2018 முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை, அவர் மீது புனே, அகமதுநகர் மற்றும் லத்தூர் ஆகிய இடங்களில் மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் எங்களிடம் ஒரு பெண் அணுகி, பாட்டில் என்ற ஒருவர், மேட்ரிமோனியில் சந்தித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி, காதல் வலை போட்டு, உடல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும், பின்னர் அவரது எண்ணை பிளாக் செய்ததாகவும் கூறியபோதுதான் அவரின் அடையாளம் மற்றும் பல முக்கிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தது." என்று கூறினார்.
அந்த நபர் நவம்பர் 18 அன்று தக்துஷேத் கணபதி கோவிலில் ஆயுதப்படை சீருடை அணிந்து ஆன்லைன் மேட்ரிமோனியல் சேவை மூலம் அறிந்துகொண்ட பெண்ணை சந்தித்தார். அங்கேயே திருமணம் செய்துகொள்வது போல நடித்து, பின்னர் அவர் அவளை சிங்ககாட் சாலையில் உள்ள ஒரு லாட்ஜ் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார், தற்போதைக்கு திருமணம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என சத்தியம் வாங்கினார், அவரும் சத்தியம் செய்தார் என்று போலீசாரிடம் கூறினார். பின்னர் தன்னை காரில் ஏற்றி, தன் விருப்பத்திற்கு மாறாக தன்னுடன் உடலுறவு கொண்டதாக பெண் போலீசாரிடம் கூறினார். அவள் லாட்ஜை விட்டு வெளியேறியவுடன், அந்த நபர் அவளது எண்ணைத் பிளாக் செய்து அனைத்து தகவல்தொடர்புகளையும் நிறுதியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் சிங்ககாட் சாலை காவல் நிலைய அதிகாரிகளை அணுகியபோது ஒரு வாரத்திற்கு முன்பு அவர் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.