கோயில்களில் நடக்கும் இரு வீடியோக்கள் சமீபத்தில் வைரலாகி உள்ளன, ஒன்றில் ஒருவர் யானை சிலைக்கு கீழே சிக்கிக்கொள்வதும், மற்றொன்று அதற்கு நேர் மாறாக நாய் ஒன்று அழகாக விநாயகரை வணங்கி எழுவதும் வைரலாகி உள்ளது.
யானைக்கு அடியில் பக்தர்
இந்தியாவில் கோவில்களுக்கு செல்வது வழக்கம்தான், இதற்காகவே பல கோயில்களுக்குச் சென்று ஆசி பெற மக்கள் அடிக்கடி வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்கிறார்கள். அதுமட்டுமின்றி வேறெந்த நாடுகளிலும் இல்லாத வித்யாசமான வழிபாட்டு முறைகள் இந்தியாவில் அதிகம். தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் சாமி கும்பிடுகிறேன் என, யானை சிலைக்கு அடியில் சிக்கிக்கொண்டதைக் காண முடிகிறது. அந்த நபர் ஒரு சடங்கு செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ட்விட்டர் பயனாளர் நிதின் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் பெருகும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அந்த மனிதன் சிலையை விட்டு வெளியேறி வருவதற்கு சிரமப்படுவதை விடியோவில் காணலாம்.
வைரலான விடியோ
அந்த நபர் சிலையின் அடியில் படுத்துக் கொண்டு, கை, கால்களைப் பயன்படுத்தி சக்தியைப் பிரயோகித்து அதன் வழியாகச் செல்ல முயற்சிக்கிறார். ஆனால், அவரால் உள்ளே நுழைய முடியவில்லை. இதனை செய்யும்போது அவரைச் சுற்றிலும் பலர் சூழ்ந்துள்ளனர். அனைவருடனும் சேர்ந்து கோவில் பூசாரியும் அந்த நபருக்கு வெளியே வர உதவுவதைக் காண முடிகிறது. ஆனால் இவ்வளவு பேர் முயற்சித்தும், எந்த பயனும் இன்றி அவர் உள்ளேயே சிக்குண்டு இருக்கிறார். இந்த விடியோ வைரலாகி வரும் நிலையில் பலர் அவர் குறித்து கமென்டில் எழுதி வருகின்றனர். நாய் கூட அழகாக சாமியை கும்பிட்டு எழுந்து செல்லும் நிலையில் மனிதர்களுக்கு என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர்.
விநாயகரை வணங்கும் நாய்
அமாம், கோவிலுக்கு வெளியே உள்ள விநாயகர் சிலைக்கு முன்னால் நாய் சாமி கும்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் ஒரு பயனர் பகிர்ந்த வீடியோ, நாய் எவ்வளவு அபிமானமானது என்பதற்காக பயனர்களிடமிருந்து பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. வீடியோவில், கோவிலுக்கு வெளியே உள்ள விநாயகர் சிலைக்கு முன் ஒரு நாய் குனிந்திருப்பதைக் காணலாம். அருகில் இருந்தவர் சிலைக்கு மரியாதை செலுத்தியபோது, அந்த நாயும் தலையைத் தாழ்த்தி, அதன் முகத்தின் அடிப்பகுதியால் தரையில் தொட்டு வாங்குகிறது. இறுதியில், அந்த நபர் வணங்குவதை முடித்தவுடன், நாயும் எழுந்து அவரோடு நடக்கத் தொடங்குகிறது. ஹர்ஷிவ் கோடேச்சா பாடிய ஜெய் கணேஷ், ஜெய் கணேஷ் தேவா, கிட்ஸ் ஸ்பெஷல் பாடலையும் இந்த வீடியோவோடு பயனர் பின்னணியில் சேர்த்துள்ளார்.
கமெண்ட்ஸ்
வீடியோவில் உள்ள நாய் எவ்வளவு அழகாக வணங்குகுறது என்பதைப் பற்றி பயனர்கள் கமென்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பயனர்களில் ஒருவர், "கணபதி, இந்த குழந்தையை ஆசீர்வதிக்கவும்" என்று எழுதினார். மற்றொரு பயனர் எழுதினார், “இது மிகவும் அழகாக இருக்கிறது. இந்த வீடியோவைப் பார்ப்பதை நிறுத்த முடியவில்லை”, என்று மற்றொரு பயனர் எழுதினார், "அய்யோ, இது மிகவும் அபிமானமான நாய்". என்று ஒருவர் கூற, “இதை திரும்ப திரும்ப பார்க்கிறேன். நாய்கள் நம் வாழ்வின் முக்கியமான விஷயங்களில் ஒன்று, ”என்று மற்றொரு பயனர் கருத்துப் பிரிவில் கூறி இருந்தார். மேலும் பல பயனர்கள் இதயங்கள், சிரித்த முகங்கள், நெருப்பு, ஹார்ட் மற்றும் பல மகிழ்ச்சியான எமோஜிகளுடன் கருத்து தெரிவித்தனர்.