தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த அளித்த தாழ்வு பகுதியாக உருமாறி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்க கடல்  மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் மீது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது இது மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.


வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. அதன் பிறகு, அது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மேலும் படிப்படியாக  புயலாக தீவிரமடைந்து வட தமிழகம் புதுவை மற்றும் ஆந்திரா கடற்கரை அடையும்.


இதன் காரணமாக இன்று அந்தமான் பகுதியில் கனமழை பெய்யக்கூடும், டிசம்பர் 07 நள்ளிரவு முதல் வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் அகிய பகுதிகளில் கனமழையுடன் கூடிய சில இடங்களில்  மழை அதிகரிக்கக்கூடும், இது மேலும் படிபடியாக கனமழை முதல் மிக கனமழையுடன் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.


06.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.
 
07.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 


08.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்; ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 


டிசம்பர் 08 ஆம் தேதி உள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ளிட்ட இடங்களில் மிகக் கனமழையும், 9 ஆம் தேதி தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழையும் மற்றும் டிசம்பர் 10 ஆம் தேதி உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தெற்கு ஆந்திராவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.