ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர்:


கேஷபூர் மண்டி பகுதியில் உள்ள டெல்லி நீர்வள வாரிய வளாகத்தில் நேற்றிரவு 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அடையாளம் தெரியாத நபர் விழுந்தார். அப்போது அருகில் உள்ளவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது ஒரு குழந்தை என்றும், விரைவில் சம்பவ இடத்திற்கு வரும் படியும் அதிகாரிகளுக்கு நேற்று இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றில் சிக்கியது குழந்தை இல்லை என்றும் அது இளைஞர் என்றும் தெரிவித்தனர்.


அப்போது அங்கு வந்த டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, போர்வெல் பூட்டி இருந்ததாகவும், அது குழந்தையல்ல, இளைஞர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். அதேநேரம் அந்த நபர் உடைந்த சுவர் வழியாக உள்ளே நுழைந்து இருக்கலாம் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.


பயன்பாட்டில் இல்லாத போர்வெல்களுக்கு சீல்:


இந்நிலையில் தான் ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருந்த இளைஞர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், உயிரிழந்த இளைஞர் தொடர்பான எந்த தகவலும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் ஆழ்துளை கிணற்றில் விழந்தவர் ஏதாவது திருட்டு வேலையில் ஈடுபட்டவரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்


முன்னதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்ட சமூக வலைதள பக்கத்தில், நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி நிலைமையை ஆய்வு செய்தார். பூட்டப்பட்ட அறைக்குள் போர்வெல் இருப்பது தெரியவந்தது





டெல்லி போலீசார் முழு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். டிஜேபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத அரசு மற்றும் தனியார் போர்வெல்கள் அனைத்தும் 48 மணி நேரத்தில் சீல் வைக்கப்படும்என்று கூறியுள்ளார்.