தமிழ்நாட்டில் கணவனின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்று பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது வழக்கம் ஆகும். பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது போலவே வட இந்தியாவில் கணவனின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் கர்வா சௌத் என்ற விரதம் இருப்பது வழக்கம்.
மியா கலிபாவை பார்த்து முடிந்த விரதம்:
இந்த விரதத்தின்போது பெண்கள் வட்ட வடிவிலான சல்லடை போன்ற பாத்திரம் மூலமாக தனது கணவனின் முகத்தை பார்ப்பார்கள். திருமணம் ஆகாத பெண்கள் நிலவைப் பார்ப்பார்கள். அந்த நிலவானது சிவபெருமானின் தலையில் உள்ள நிலவை குறிக்கிறது. இவ்வாறு பார்த்து பெண்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்வது வழக்கம்.
இந்த நிலையில், வட இந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கர்வா சௌத் விழாவை முன்னிட்டு பெண்கள் பார்ப்பது போலவே சல்லடை போன்ற பாத்திரத்தில் விளக்கை ஏற்றி அந்த சல்லடை வழியாக நடிகை மியா கலிபாவை பார்க்கிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆதரவும், கண்டனமும்:
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதியவரின் இந்த செயலைப் பார்த்த பலரும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும், வேடிக்கையானது என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் தாத்தாவின் இந்த செயலும், இதை வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கியதும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.