மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். சரக்கு மற்றும் சேவை வரிக்கான நிலுவைத் தொகைகள் மற்றும் மத்திய அரசு திட்டங்களின் பிற நிலுவைத் தொகைகள் உள்பட பல விவகாரங்கள் பற்றி இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.


பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநிலங்களுக்கு, குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை தாமதப்படுத்துவதாக மேற்குவங்க அரசு அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறது.


ஜூன் மாதம், மேற்கு வங்க முதலமைச்சரின் தலைமை ஆலோசகர் அமித் மித்ரா, மேற்குவங்கத்திற்கு 27,000 கோடி ரூபாய்க்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.


எவ்வாறாயினும், அமலாக்க இயக்குனரகத்தால் அமைச்சர் பதவி வகித்து வந்த பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெறுவதால் இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் பணக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் பார்த்தா, பானர்ஜியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்டவர்.


மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பானர்ஜி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தகாத கருத்துகள் கூறியதற்காக மாநில பாஜக தலைவர் திலீப் கோஷை கைது செய்ய வேண்டும் என்று திரிணாமுல் கோரிக்கை விடுத்துள்ளது.


நான்கு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள பானர்ஜி, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளார். பின்னர் இன்று அவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார்.


ஆகஸ்ட் 7ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா கலந்து கொள்கிறார். ஆட்சி மன்றக் கூட்டத்தில் விவசாயம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.


பானர்ஜி கடந்த ஆண்டு நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு கூட்டத்தில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தாதது மற்றும் கூட்டாட்சி பிரச்சினைகள் குறித்த கவலைகளை அவர் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண