குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் பிரசாரம் தொடங்கி களத்தில் வெவ்வேறு வகையிலான பிரச்சாரம் என மக்கள் புருவங்களை உயர்த்தும் வகையில் பிரசாரம் நடந்தது. குஜராத் சட்டசபைக்கான முதல்கட்டத் தேர்தல் திசம்பர் 1 அன்று நடந்தது. இதற்கிடையே மேற்கு வங்க மக்கள் குறித்த அவருடைய தேர்தல் பரப்புரை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பரேஷ் தனது பிரசாரத்தில் “கேஸ் சிலிண்டர்கள் விலை அதிகம், ஆனால் அவற்றின் விலை குறையும். மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஆனால், டெல்லியைப் போல ரோஹிங்கியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களும் வங்கதேசத்தினரும் உங்களைச் சுற்றி வாழ ஆரம்பித்தால் என்ன நடக்கும்? கேஸ் சிலிண்டர்களை என்ன செய்வீர்கள்? வங்காளிகளுக்கு அதில் மீன் சமைப்பீர்களா?” என ராவல் கூறியிருந்தார்.”






இந்த கருத்து அவருடைய வங்காள ரசிகர்களிடயே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து அதற்கு மன்னிப்புக் கோரியிருந்தார் அவர், அதில், “மக்கள் மீன் சமைத்துச் சாப்பிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. குஜராத்திகள் மீன் சமைத்துச் சாப்பிடுபவர்கள்தானே. நான் வங்காளிக்கள் என சொன்னது சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்த பங்களாதேஷ் மக்களை ரொஹிங்கியாக்களை. இருப்பினும் அது உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் ” எனக் கூறியிருந்தார். 


இதற்கு பதில் அளித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, “உண்மையில் தன்னைத் தானே நகைச்சுவைக்குரியவராக்கிக் கொள்ளும் காமெடியன் இதற்கு மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. அவர் மீன்கள் சமைத்துக் கொடுக்கவேண்டுமா என்று கேட்டதன் இரண்டாவது பகுதி வங்காளிகளைப் போல மூளை உள்ளவர்களாக இருக்க வேண்டுமா? என்பதாகும் ஏன் என்றால் நாட்டிலேயே அதிக நோபல் பரிசு பெற்றவர்களைக் கொண்ட மாநிலம் எங்களுடையதுதான்” என பதிலடி கொடுத்துள்ளார். 







குஜராத் தேர்தல் ஒருபுறம் இருக்க தேர்தலை ஒட்டி கீழ்த்தரமாகப் பிரசாரங்கள் நிகழ்ந்து வருவதாக நடிகர் ஸ்வரா பாஸ்கர் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் கேப்ஷன் ஒன்றில் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.