மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம், பெத் தாலுகாவில் உள்ள போரிச்சிவாரி கிராமத்தில் தண்ணீர் நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இக்கிராமத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதால், கிராம மக்கள், குறிப்பாக பெண்கள், தினமும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் பல தூரம் சென்று கிணறுகளில் இறங்கி தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


ஆபத்தான நிலையில் தண்ணீர் எடுக்கும் பெண்கள்


தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் நாளின் பெரும் பகுதியை தண்ணீர் எடுப்பதில் மட்டுமே செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்களது வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை வளர்ப்பையும் பாதிக்கிறது என்றும் தெரிவித்தனர். இந்த நிலை உடல் சோர்வுக்கு ஏற்படுவது மட்டுமன்றி மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது என அப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர்.


அதிர்ச்சி காட்சி:


இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், பெண் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கும் காட்சியையும்,  கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கயிற்றீன் மூலம் குடங்கள் வழியாக அனுப்பும் காட்சியையும் பார்க்க முடிகிறது.  இந்த ஆபத்தான காட்சி குறித்து பலரும் கவலை தெரிவித்தும், அரசு நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். 






போர்ச்சிவாடி கிராமத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து நாசிக் மாவட்ட பரிஷத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கோடை காலத்தில் தேவைப்படும் கிராமங்களுக்கு டேங்கர்கள் மூலம் குடிநீர் வழங்க ஒரு திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. 


தண்ணீர் நெருக்கடியைச் சமாளிக்க, போர்ச்சிவாடி கிராமத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாசிக் மாவட்ட நிர்வாகம் ரூ.8.8 கோடியை ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


Also Read: இண்டர்போலிடம் சென்ற வங்கதேச போலீஸ்: இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவை கைது செய்யுங்கள்!