மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பட்டப்பகலில் வயதான தம்பதிகளிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.


புனேவில் பட்டப்பகலில் ஷாக் சம்பவம்: வியாழக்கிழமை மதியம் வங்கியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கடையில் வடை பாவ் சாப்பிட மூத்த தம்பதியினர் நின்றிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையோரம் உள்ள உணவகத்தில் சாப்பிடுவதற்காக தங்களுடைய ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளனர். 


வடை பாவ் வாங்குவதற்காக கடைக்குள் முதியவர் நுழைகிறார். ​​அந்த பெண் ஸ்கூட்டர் அருகே காத்திருக்கிறார். ஒரு சில வினாடிகளியே, முகமூடியுடன் பைக்கில் ஒரு நபர் வருகிறார். ஸ்கூட்டர் அருகே நின்று, சாலையில் ஏதோ விழுந்துவிட்டதாக அந்தப் பெண்ணிடம் ஏதோ சொல்கிறார்.


மூதாட்டியிடம் நகை கொள்ளை: இந்த நேரத்தில், வெள்ளை சட்டை அணிந்த மற்றொருவர் ஸ்கூட்டரைப் பின்தொடர்ந்து வருகிறார். அந்த மூதாட்டி பொருளை எடுக்க குனிந்தவுடன் ஸ்கூட்டரில் வந்த வெள்ளை சட்டை அணிந்தவர் பையில் வைத்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடுகிறார்.


 






சிறிது நேரம் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் மூதாட்டி முழிக்கிறார். உடனே, அந்த ஆணின் பின்னால் ஓடுவதையும் உதவிக்காக அலறுவதையும் வீடியோவில் காணலாம். அந்த பையில் வங்கி ஆவணங்கள் மற்றும் மொபைல் போனும் இருந்திருக்கிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதையும் படிக்க: அச்சச்சோ.. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது!