நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருப்பது மகாராஷ்டிரா. இந்த மாநிலத்தில் அமைந்துள்ள நாக்பூர் நகரத்தில் ஒரு குற்றம் நடந்துள்ளது. மதுவிற்கு பணம் கொடுக்க மறுத்ததற்காக ஒருவர் மற்றொரு நபரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த குற்றத்தின் பேரில் நாக்பூர் நகரைச் சேர்ந்த 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சுபம் அசோக் மேட்டி நேற்றி இரவு 7.15 மணியளவில் மகேஷ் சந்தோஷ் நந்தன்வாரை (31) டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சதுக்கத்தில் நின்று கொண்டிருந்தபோது சந்தித்துள்ளார்.


மது குடிக்க பணம் கேட்ட நபர்:


அப்போது, நந்தன்வாரிடம் மது அருந்த வேண்டும் என்று மேட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நந்தன்வாரை மேட்டி கத்தியால் தாக்கியுள்ளார். அவ்வழியே சென்ற இருவர் மேட்டியை பிடிக்க முயன்றனர்.


ஆனால், அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட நந்தன்வார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், லகட்கஞ்ச் போலீசார் மேட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


அதிகரிக்கும் குற்ற செயல்கள்:


இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சமீப காலமாகவே, குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், தயாரிக்கப்படும் ஒயின், பீர், பிராந்தி, விஸ்கி, நாட்டு சாரயம் உள்ளிட்ட அனைத்து எத்தனால் கலந்த மதுபான வகைகளும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு தீவிர உடல்நல குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன.


மதுவால் ஏற்படும் கெடு:


இதுகுறித்த விழிப்புணர்வு மக்களுக்கு மிகவும் குறைவாகவே இருப்பது வருத்ததிற்குரியது. மருந்திற்காக உட்கொள்ளப்படும் ஆல்கஹால் நுகர்வு உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்டவைகள் ஏற்பட துணைக்காரணியாக இருக்கிறது.


மதுவை சமூகத்திற்காகவும், நண்பர்களுடன் இணைந்து ஒரு சில நாட்களில் குடிக்கிறோம் என்று ஆரம்பித்தால், மதுவிற்கு அடிமையாகி விடுகின்றனர். மதுவை அருந்துபவர்கள் சரிவிகித உணவை உண்ணாமல் இருக்கின்றனர். மது அருந்தியப் பின்னர் வயிறு நிறைந்து விடுவதால் உணவையும் தவிர்கின்றனர். 


இதனால், புற்றுநோய் நேரடியாக வராவிட்டாலும், பிற உறுப்புகள் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது. மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என கூறப்பட்டு இருந்தாலும், போதுமான விழிப்புணர்வு இல்லாமல் அதிகளவில் மது அருந்துகின்றனர்.