Maharashtra Deputy CM: இந்தியாவின் வளர்ச்சியை மகாராஷ்டிரா முன்னோக்கி எடுத்து செல்லும் என்று துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
உச்சி மாநாடு:
இந்திய குளோபல் ஃபோரம் உச்சி மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் மும்பை துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய அவர், "மும்பை விரைவில் வளர்ச்சி உள்கட்டமைப்பில் மிகவும் முன்னேறிய நகரமாக இருக்கும். நாங்கள் 2014ஆம் ஆண்டில் இருந்து 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை மும்பையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முதலீடு செய்துள்ளோம்.
மும்பையில் மிக நீளமான கடற்கரை சாலைகளும், மெட்ரோ ரயில்களும் உள்ளன. மும்பை மற்றும் நவி மும்பைக்குப் பிறகு, இப்போது மூன்றாவதாக புதிய மும்பை உருவாகப்போகிறது. மும்பை விமான நிலையம் மற்றும் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புக்கு இடையே மூன்றாவது மும்பை உருவாகும்.
”டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி மகாராஷ்டிரா”
எதிர்காலத்தில் வளர்ந்த மும்பையாக மாறும். இந்தியாவின் வளர்ச்சியை மகாராஷ்டிரா முன்னோக்கி எடுத்து செல்லும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மகாராஷ்டிரா தலைமை தாங்கும். முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகள் இருக்கிறது.
பாதுகாப்பு, வலுவான சமூக உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கும். அடுத்த பத்தாண்டிகளில் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதே எங்களின் முக்கியமான நோக்கம்.
குஜராத், கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை விட எங்களின் முதலீடுகள் சிறப்பானது. இது மகாராஷ்டிரா மாநிலம் மீது முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாகும். முதலீடுகளில் மகாராஷ்டிரா எப்போதும் முதலிடத்தில் இருக்கும். உலகளவில் இந்தியாவின் மையப்பகுதியாக மும்பை இருக்கும். வருங்காலத்தில் மும்பை உருவாக்குவதை எங்களது நோக்கம்" என்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்.
மேலும் படிக்க
PM Modi: "புதிய ஜம்மு காஷ்மீர்" ஸ்ரீநகர் பொதுக்கூட்டத்தில் மனம் திறந்து பேசிய பிரதமர் மோடி!