மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர், தனது குழந்தையை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தையுடன் வெறுங்கைகளிலேயே போராடி மீட்டுள்ளார்.


மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. சித்தி மாவட்டம், சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் அருகே உள்ளது. சித்தி பகுதியில் பாய்கா பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறு குழந்தை ஒன்றை இரையாகப் பிடித்தது. அதனைப் பார்த்ததும் சற்றும் தயங்காத அந்தப் பெண் வெறுங்கைகளுடனேயே சிறுத்தையுடன் போராடினார். அப்போது அந்தப் பெண்ணுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இருந்தாலும் சிறுத்தையின் பிடியில் இருந்து குழந்தையை மீட்டார். அந்த ஆண் குழந்தையின் உடலில் நகக் கீறல்களும், பல்லால் ஏற்பட்ட காயங்களும் உள்ளன.


கிரண் என்ற அந்த வீரத்தாய்க்கு கிராம மக்கள் பாராட்டைக் குவித்து வருகின்றனர். அவர் வாழும், பாதி ஜிரியா கிராமத்தில் இருந்து மிக மிக அருகில் தான் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா உள்ளது. சஞ்சய் காந்தி தேசியப்பூங்கா (Sanjay Gandhi National Park) இந்தியாவின் மும்பைக்கு அருகில் 87 கிமீ 2 (34 சதுர மைல்) பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அமைந்துள்ளது. இந்த வனத்தில், சிறுத்தை, காட்டுப்பூனை, கீரி, நாற்கொம்புமான், சாம்பர், எலிமான், வராகம், ல்ங்கூர், குரங்கு, மகரம், முதலை முதலியன அடங்கும்.


இதனால் அவ்வப்போது அப்பகுதியில் விலங்கு மனித மோதல் ஏற்படுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் 6 வயது சிறுவன் ராகுலை சிறுத்தை இரையாக்க முயன்று ஒரு பெண் சிங்கத்திடம் தோற்றுப் போயுள்ளது.


இரவு நேரமாக இருந்தாலும் கூட, கிரண் தனது குழந்தை ராகுலைக் காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் போராடி மகனை மீட்டுள்ளார்.


இப்போது அந்த சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் மிகப்பெரிய வேண்டுதலாக இருக்கிறது. இந்தியா முழுவதுமே வனப் பகுதிகளை மனித விலங்கு மோதல் அதிகமாக இருக்கின்றன. சில நேரங்களில் இரை, தண்ணீருக்காக வன விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. அப்படி வரும்போதும் வன விலங்குகளால் மனிதர்களுக்கு ஆபத்து நேர்கிறது. வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 11 (1) (பி)-யின் படி பிரச்சினைக்குரிய வன விலங்குகளை கையாள்வதற்கான அதிகாரத்தை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்குமாறு இந்த அறிவுரை பரிந்துரைக்கிறது.  வனப்பகுதிகளில் தொழிற்சாலைகள் ஆக்கிரமிப்பு செய்வதாலேயே விலங்குகள் இரைக்காக ஊருக்குள் வருகின்றன என்பது மக்களின் ஆதங்கம்.