இது வெயில் காலம். நாடு முழுவதும் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலைப் பார்த்து எல்லோரும் ஒதுங்கிச் செல்லும் வேளையில், தங்களின் வேலைக்காக வெளியே சென்று வெயிலில் அலைந்து நாட்களை கடத்துப்பவர் பலர். அந்த வரிசையில், உணவு டெலிவரி செய்பவர்கள், இடைவெளியின்றி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜொமாட்டோவில் வேலை செய்து, சைக்கிளில் டெலிவரி செய்து வந்த 22 வயதேயான ஜே ஹல்டே என்பவருக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் இரு சக்கர வாகனத்தை பரிசளித்துள்ளனர்.
இந்தோர் விஜய நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தெஹ்சீப் குவாசி என்ற காவல் அதிகாரி, ஹே ஹல்டே சைக்கிளில் உணவு டெலிவரி செய்பவரை கவனித்துள்ளார். சைக்கிள் ஓட்டி சோர்வாக காணப்பட்ட அவரை கவனித்த குவாசி, அவரிடம் பேசி இருக்கிறார். பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் ஜே, இரு சக்கர வாகனம் வாங்க பணம் இல்லாமல் சைக்கிள் ஓட்டி சம்பாதித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.
அதனை அடுத்து, குவாசி மற்றும் சக காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து தங்களால் இயன்றி பணத்தை திரட்டி முன் பணம் செலுத்தி ஜேவிற்கு இரு சக்கர வாகனத்தை வாங்கி தந்துள்ளனர். மேலும், இரு சக்கர வாகனத்திற்கான மீதி பணத்தை உணவு டெலிவரி ஊழியரான ஜே தானே செலுத்திவிடுவதாக தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் விஜய நகரின் நெகிழ்ச்சியைப் ஏற்படுத்தி இருக்கிறது.
வீடியோவைக் காண:
இது குறித்து பேசிய ஜே, “முன்னதாக நாளொன்றுக்கு என்னால் 6-8 ஆர்டர்களை மட்டுமே டெலிவரி செய்ய முடியும். இப்போது 15-20 ஆர்டர்களை டெலிவரி செய்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
பொது மக்கள் தங்களால் இயன்ற சிறிய உதவிகளைச் செய்யலாம். உணவு டெலிவரி செய்ய வருபவர்களிடம் சிறு புன்னகையோடு நன்றி சொல்லலாம். உணவை வாங்கும்போது தண்ணீர் வேண்டுமா என கேட்கலாம் அல்லது ஒரு பாட்டிலில் தண்ணீர் குடிக்க தரலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்