மத்திய பிரதேசத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் முதலை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எட்டு அடி நீளமுள்ள முதலை ஒன்று ஷிவ்புரியின் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததும், அருகில் இருந்தவர்கள் பீதியடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு காலனியில் முதலை காணப்பட்டது, அதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், நிரம்பி வழியும் ஆற்றால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால், முதலை காலனியை சுற்றி மிதப்பதைக் காணலாம். குடியிருப்பாளர்கள் தங்கள் கேமராக்களில் அதன் அசைவுகளை பதிவு செய்வதைக் காணலாம். இருப்பினும், முதலை காலனியை சுற்றி நகர்ந்ததால், ஒரு மணி நேர முயற்சிக்கு பிறகு வனத்துறை குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டு சிக்கியதாக அந்த செய்தியில் தகவல் வெளியிட்டுள்ளது.




அந்த மாநிலத்தின் மாதவ் தேசியப் பூங்காவில் இருந்து வந்த மீட்புக் குழுவினர், இறுதியில் சாங்க்ய சாகர் ஏரியில் முதலையை விடுவித்ததாக, காவல்துறை துணைப் பிரிவு அதிகாரி (SDOP) அஜய் பார்கவா கூறியதாக பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


நகரில் ஏராளமான ஏரிகள் மற்றும் சிறு நீரோட்டங்கள் வறண்டு காலியாவதால் அதில் இருக்கும் உயிரிகள் அங்கிருந்து நகர்கின்றன, இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மழைக்காலத்தில் ஏரிகளின் நீர்மட்டம் உயரும் போதுஇந்தப் பிரச்சனை மோசமாகும் என்று பத்திரிகை தனது செய்தியில் தெரிவித்துள்ளது.


இந்த மாத தொடக்கத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், கர்நாடக வனத்துறையினர் மைசூரு மாவட்டத்தில் உள்ள ஹெக்கடதேவனகோட் நகரில் சிறுத்தைகளை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர், இது குடியிருப்பாளர்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது.


சிறுத்தைப்புலிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து 2 மாதங்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை தாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இரவு மற்றும் காலை நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். நகரின் ஸ்டேடியம் லேஅவுட் அருகே உள்ள விவசாய நிலங்களில் இரண்டு பெரிய பூனைகள் சுற்றித் திரிவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடுகளில் காணப்படும் ஆடு, கோழி, நாய்களை சிறுத்தைப்புலிகள் தாக்கி எடுத்துச் செல்கின்றன.


ஆரம்பத்தில், தங்கள் வீட்டு விலங்குகள் பண்ணைகள் மற்றும் வீடுகளில் இருந்து காணாமல் போகத் தொடங்கியதாக மக்கள் கூறுகிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு பகலில் விளைநிலங்களில் சிறுத்தைப்புலிகள் நடமாடுவதைப் பார்த்தபோதுதான் இது தெரியவந்துள்ளது. அச்சத்தில் இருந்த மக்கள் இதனால் தங்கள் நிலங்களுக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.