Shocking Video : மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு நபரை மூன்று பேர் கொண்டு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாலையில் நின்ற நபர்
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் விஜய். இவர் நேற்று இரவு 9 மணியளவில் சாலையில் தனியாக நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்துக் கெண்டிருந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்து அவரின் சட்டை பாக்கெட்டுகளை சோதனை செய்தனர். அப்போது விஜய் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடனே அந்த மூன்று பேர், விஜயை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், விஜய்யின் கழுத்தில் நாய் செயினை மாட்டி, அவரை கடுமையாக அடித்துள்ளனர். மேலும், அவரை நாய் போன்று குரைக்க சொல்லியும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, காலால் அவரது முகத்தில் உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டல்
மேலும், விஜய் என்பவரை வேறு இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அவரிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து, விஜய் தன்னிடம் இருந்து செல்போன், பைக் சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர், காசு வேண்டும் என்று பயங்கரவாக அடித்துள்ளனர்.
இதனால் அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 800 ரூபாயை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார் விஜய். இதுமட்டுமின்றி, தன்னை ஒரு முஸ்லீமாக மாற வேண்டும் என்றும் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினர். இதற்கு விஜய் மறுப்பு தெரிவித்ததால், அவரின் குடும்பத்தை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். மூன்று பேர் கொண்ட கும்பல் விஜயின் கழுத்தில் நாய் செயினை மாட்டி, கொடூரமாக தாக்கிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கைது
இதனை அடுத்து, மத்திய பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் விஜய் என்ற நபரை கொடூரமாக தாக்கிய அந்த கும்பலை கைது செய்தனர். அவர்கள் சமீர், சஜீத், பைசான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்ககப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார். புகாரில், தன்னை அந்த கும்பல், பணம் கேட்டு துன்புறுத்தியதாகவும், நாய் போன்று குரைக்கவும், முஸ்லீமாக மாற வேண்டும் என்றும் வற்புறுத்தியதாக” தெரிவித்தார்