கொரோனா பரவலின் 3 ஆம் அலை அதிகரித்துவரும் நிலையில், டோலோ 650 மாத்திரையின் விற்பனை பட மடங்கு அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் டோலோ 650 மாத்திரைகளை தயாரித்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 560 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.
இதனால் இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஜிஎஸ்கே பார்மா, கால்பால். சுமோ எல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மருந்து மாத்திரை நிறுவனங்கள் விற்பனையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28.9 கோடிக்கு டோலோ 650 மாத்திரைகள் விற்பனை செய்யப்ட்டன. இந்த அளவானது முந்தைய ஆண்டு டிசம்பர் மாதம் விற்கப்பட்ட மாத்திரைகளை விட 60 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அந்த காலகட்டத்தில் மருந்து நிறுவனமான கால்பால் நிறுவனம் 28 கோடி ரூபாய்க்கு தங்களது மருந்துகளை விற்பனை செய்தது. இந்த விற்பனையானது, கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் விற்பனையை விட 56 சதவீதம் அதிகமாகும்.
பொதுவாக காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும் போது, எப்படி டோலோ 650 மாத்திரைகளின் விற்பனை அதிகமானது என மருத்துவர்கள் ஆராந்தனர். இது குறித்து ப்ரிண்ட் இணையளத்திற்கு பேசிய மருத்துவர் ரித்தேஷ் குப்தா, “ டோலோ 650 மாத்திரை பாராசிட்டமால் பிராண்டுகளில் ஒன்றுதான். பொதுவாக காய்ச்சலுக்கு இந்த மாத்திரைகளை அளிப்பார்கள். இந்த மாத்திரைகள் குரோசின், கால்பால், பசிமோல் போன்ற மாத்திரைகளிலிருந்து வேறுபட்டது அல்ல. பாதுகாப்பான மருந்தாக பார்க்கப்படும் இவற்றை கிட்னி, இதயம் சர்க்கரை வியாதி உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படும் அனைத்து வயதினருக்கும் கொடுக்க முடியும்.” என்றார்.
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்