இந்திய ராணுவத்தில் தற்போது மலைப் போரில் ஈடுபடப் பயன்படுத்தப்பட்டு வரும் சீட்டாஸ் மற்றும் சேட்டக் ரக வாகனங்களை மாற்ற ராணுவம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 95 எண்ணிக்கையிலான பிரசாந்த் லைட் காம்பாட் ஹெலிகாப்டர்கள் மற்றும் 110 இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் (எல்யுஎச்) வாங்குவதற்கு ராணுவம் திட்டமிட்டுள்ளது என்று ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.


பெங்களூருவில் நடந்து வரும் ஏரோ இந்தியா நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ராணுவம் ஆறு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களை பெற உள்ளது என்றும் அதில் ஆட்டோ பைலட் திறன் போன்ற சில மேம்பாடுகளை ராணுவம் நாடியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 


கூடுதலாக, இராணுவம்  ஏற்கெனவே ஆர்டர் செய்த ஆறு அமெரிக்க அப்பாச்சி தாக்குதல் ரக ஹெலிகாப்டர்களையும் 2024க்குள் பெற எதிர்பார்க்கிறது கூடுதல் ஆர்டர்கள் பிரசண்ட்ஸ் எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்து இருக்கும், என்றும் ராணுவ ஜெனரல் பாண்டே கேள்விக்கு பதிலளித்தார்.


மேலும், "எங்களிடம் போர் விமானப் பிரிவு உள்ளது,  அது ALH WSI என அழைக்கப்படுகிறது. அது ஆயுதமேந்திய மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற 45 ஹெலிகாப்டர்கள் உள்ளன. மேலும் எங்களிடம் தற்போது 5 இலகுரக வாகனங்கள் உள்ளன, அவற்றில் மூன்று மட்டுமே டெலிவர் செய்யப்பட்டுள்ளன. மேலும் மொத்தம் 90-95 LCHகளை நாங்கள் பார்த்து வருகிறோம்” என்று அவர் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.


ராணுவ தின வரலாற்றில் முதல்முறையாக ராணுவ தின அணிவகுப்பு டெல்லிக்கு வெளியே நடைபெற உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம்இஜி மையத்தில் உள்ள மைதானத்தில் இந்த அணுவகுப்பு நடைபெறுகிறது.


கடந்த 1949ஆம் ஆண்டு முதல் ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 75ஆவது ராணுவ தினமான இன்று வரலாற்றில் முதல்முறையாக டெல்லிக்கு வெளியே ராணுவ தின அணிவகுப்பு நடைபெறுகிறது. இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இந்த அணிவகுப்பை ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேரில் பார்வையிட்டு, வீர தீர செயலுக்கான விருதை அளிக்க உள்ளார். இதை தொடர்ந்து, டோர்னாடோஸின் ராணுவ சேவை படை மோட்டார் சைக்கிளை கொண்டு சாகசத்தில் ஈடுபட உள்ளனர்.


பின்னர், பாராட்ரூப்பர்களின் ஸ்கை டைவிங் ஷோ, ராணுவ விமானப் படையின் ஹெலிகாப்டர் சாகச ஷோ ஆகியவை நடைபெற உள்ளது.






 


கடந்த 1949 ஆம் ஆண்டு, ஜெனரல் (பிற்காலத்தில் பீல்ட் மார்ஷல்) கே.எம். கரியப்பா, ஆங்கிலேய ராணுவத்தின் கடைசி தலைமைத் தளபதியான ஜெனரல் சர் பிரான்சிஸ் ராபர்ட் ராய் புச்சரிடமிருந்து இந்திய ராணுவத்தின் தளபதியாகப் பொறுப்பேற்ற நிகழ்வின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 அன்று ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியர் ஒருவர், ராணுவ தளபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.


சமூகத்துடன் ஆழமான தொடர்பை எளிதாக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு ஃபீல்டு கமெண்டுகளில் அணுவகுப்பு நடத்தப்படும். 


இந்த ஆண்டு, புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு கமாண்டின் மேற்பார்வையில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.


இலகுரக வாகனங்கள் சூழ்ச்சித்திறன் அடிப்படையில் மிகவும் பல்திறன் வாய்ந்தது மற்றும் உயரமான இடங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவத் தலைவர் மேலும் கூறினார். இலகு ரக வாகனங்கள் பெரும்பாலும் மலைகளுக்கானவை, என்றார்.