பேடிஎம் பயன்படுத்தி லைவ் ட்ரெய்ன் ஸ்டேட்டஸ் எப்படி செக் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
இதுவரை ரயில் டிக்கெட் புக் செய்வது, பிஎன்ஆர் நிலை அறிவது என எல்லாவற்றையும் ஐஆர்சிடிசி இணையதளம வாயிலாக மட்டுமே நாம் செய்து வந்தோம். இனிமேல் அதை நாம் பேடிஎம் வாயிலாகவும் செய்ய முடியும். இதனால் உங்கள் பயணம் கடைசி நேர சிக்கல்கள், குழப்பங்கள் இல்லாமல் சுலபமாக இனிமையாக அமைய வாய்ப்புள்ளது.
லைவ் ட்ரெய்ன் ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி?
லைவ் ட்ரெய்ன் ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி என்று ஒவ்வொரு ஸ்டெப்பாக அறிவோமா?
ஸ்டெப் 1: முதல் பெட்டியில் ரயிலின் எண் அல்லது ரயிலின் பெயரைக் குறிப்பிடவும்
ஸ்டெப் 2: பின்னர் நீங்கள் எங்கிருந்து ரயில் ஏற விரும்புகிறீர்களோ அதைக் குறிப்பிடவும்.
ஸ்டெப் 3: எந்த நாளில் பயணம் செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்யவும். பின்னர் லைவ் ஸ்டேட்டஸ் உங்கள் திரையில் தெரியும். இப்போது நீங்கள் உங்கள் ரயிலை தேர்வு செய்யலாம்.
நம்பத்தகுந்த இணையம்:
கூகுள் தேடலில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் அறிய சில இணையதளங்கள் இருந்தாலும் கூட பேடிஎம் இணையதளம் என்பது நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இப்படி இணையத்தில் செக் செய்வதால் பயன் என்ன?
முன்பெல்லாம் ரயில்களின் லைவ் ஸ்டேட்டஸ் அறிவது சாத்தியமே இல்லை. ஆனால் டிஜிட்டல் உலகில் எல்லாமே சாத்தியமாகிவிட்டது. இவ்வாறாக லைவ் ஸ்டேட்டஸ் அறிந்துகொள்வது பயணத்தை எளிதாக்கும்.
நேர மேலாண்மை: குறிப்பாக நீங்கள் பயண நேர மேலாண்மையை செய்ய முடியும். சரியான நேரத்தில் ரயில் நிலையம் சென்றடைவீர்கள். உங்கள் வீட்டிலிருந்து ரயில் நிலையம் தொலைவில் இருந்தாலோ அல்லது அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டியதாக இருந்தாலோ நீங்கள் எளிதில் பயணத்தை முன் கூட்டியே திட்டமிட்டு ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். இதனால் கடைசி நிமிடம் வரை பரபரப்பாக அடித்துப் பிடித்து வருவதையும் தவிர்க்கலாம். குடும்பத்தோடு 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து பொருட்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் டென்ஷனில் இருந்தும் தப்பிக்கலாம்.
திட்டமிடலாம்: லைவ் ஸ்டேட்டஸ் அறிந்து கொண்டால் பயணத்தை எளிதாக திட்டமிடலாம். ரயில் புறப்பாடு, ரயில் வந்து சேரும் நேரங்களில் மாற்றம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். சில நேரங்களில் ரயில் வரும் ஏதேனும் ஒரு ஊரில் மழையால் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் லைவ் ஸ்டேட்டஸ் அறிவது பயண திட்டமிடலுக்கு உகந்தது.
உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறதா?
உங்களுக்கு இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பேடிஎம் கஸ்டமர் சப்போர்ட் டீமை அணுகலாம். பேடிஎம் கஸ்டமர் சப்போர்ட் குழுவானது 24 மணி நேரமும் வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்கக் கூடியது.