விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இதுவரை படைத்துள்ள சாதனைகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


இஸ்ரோ:


விண்வெளி ஆராய்ச்சியில் தற்சார்பு பெரும் வகையில் 1969ம் ஆண்டு மறைந்த பிரதமர் நேரு ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம். ஆரம்பகட்டத்தில் வெறும் சைக்கிளின் ராக்கெட்டின் உதிரிபாகங்களை கொண்டு சென்ற இஸ்ரோ, தற்போது யாரும் செய்திடாத மற்றும் செயற்கரிய சாதனைகளை படைத்து உலகை வியக்கச் செய்து வருகிறது. அதில் ஒரு புதிய மைல்கல்லாக தான், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது வரை விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ படைத்துள்ள சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா படைத்த சாதனகள்:



  • புவிசார் தகவல் தொடர்பு மாதிரி செயற்கைக்கோளான ஆப்பிள் ஜூன் 19, 1981 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

  • ஏப்ரல் 1984-ம் ஆண்டு சோவியத் இன்டர்காஸ்மோஸ் திட்டத்தில் அங்கம் வகித்த ராகேஷ் சர்மா, விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியரானார்

  • ஜூலை 23, 1993ம் ஆண்டு இன்சாட்-2பி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  இது தொலைத்தொடர்பு மற்றும் வானிலை ஆய்வுக்காக வெற்றிகரமாக ஏவப்பட்ட, இன்சாட் 2 செயற்கைக்கோளின் தொடர்ச்சியாகும்

  • நிலவை ஆராயும் நோக்கில் 2008ம் அண்டு அக்டோபர் மாதம் இந்தியா தனது சந்திரயான் 1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

  • நவம்பர் 8, 2008ம் ஆண்டு நிலவின் சுற்றி வரும்படி செயற்கைக்கோளை நிலைநிறுத்திய 5வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது

  • கடந்த 2013 நவம்பர் 5-ம் தேதி செவ்வாய் கிரகத்துக்கு பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை அனுப்பப்பட்டது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்த அடைந்த நாடு என்ற பெருமையை பெற்றதோடு, வேற்று கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது

  • பிப்ரவரி 15, 2017ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட PSLV-C37 ராக்கெட் மூலம், ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி திட்டமிட்டபடி, சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி புதிய சாதனை படைத்தது. வேறு எந்த நாடும் ஒரே ராக்கெட் மூலம் இவ்வளவு எண்ணிக்கையிலான ராக்கெட்டுகளை விண்ணிற்கு சுமந்து சென்று நிலைநிறுத்தியது இல்லை

  •  2019ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் மூலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது

  • மார்ச் 27ம் தேதி 2019ம் ஆண்டு செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை ஏவிய நான்காவது நாடு எனும் பெருமையை இந்தியா படைத்தது

  • கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 34 நாடுகளை சேர்ந்த 431 செயற்கைக்கோள்களை இந்தியாவின் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது