மத்தியப்பிரதேசத்தில் பல ஆண்டுகளாக மழை இல்லாமல் பொய்த்துப்போன நிலையில், மழை வரம் வேண்டி கிராமத்து சிறுமிகளை வைத்து  நிர்வாண ஊர்வலம் நடத்திய நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலம் தமோ மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது பனியா கிராமம். இங்கு கடந்த பல ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப்போயுள்ளது. நெல்மணிகள் எல்லாம் கருகி போயிருந்த நிலையில் கடவுள் குற்றம் தான் என நம்பத்தொடங்கினர் இக்கிராமத்து மக்கள். இந்நிலையில் ஏதாவது செய்து கிராமத்தையும், விவசாயத்தையும் காக்க நினைத்த கிராமத்தினர் வழிபாடுகள் மேற்கொள்ள முடிவெடுத்தனர். இதற்காக ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கிராமத்துப்பெண்களை வைத்து நிர்வாண பூஜை செய்து கடவுளின் கோபத்தை தணிக்கலாம் என மூட நம்பிக்கையில் மூழ்கினர்.





இந்நிலையில் தான் இதுக்குறித்து தகவலறிந்த போலீசார்,  சிறுமிகளை இதுபோன்று வலுக்கட்டாயமாக பூஜை செய்ய வற்புறுத்தினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இருந்தபோதும் இதனையெல்லாம் கண்டுக்கொள்ளாத கிராம மக்கள், சிறுமிகளின் கைகளில் மரத்தினால் ஆன தடியைக் கொடுத்து, அதில் தவளைகளைக் கட்டிவைத்திருந்தனர். இதோடு மட்டுமின்றி  இந்த 6 சிறுமிகள்,  நிர்வாணமாக சுற்றி வந்து பஜனைகள் பாடியடி ஊர்வலம் மேற்கொண்டிருந்தனர்.  இச்சம்பவம் அந்த கிராமத்தில் யாருக்கும் தெரியாமல் அரங்கேறி இருந்தாலும், 2 வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வீடியோ ஒன்றில், பெண்கள் நிர்வாணமாக பஜனைகள் செய்யும் வீடியோவும், மற்றொன்றில், எங்கள் கிராமத்தில் மழை இல்லாமல் நெற்பயிர்கள் அனைத்தும் கருகி வருவதால், இது கடவுளின் கோபம் தான் என்று நினைத்து இந்த வழிபாடுகளை எல்லாம் செய்கிறோம் என்று கிராமத்து பெண்கள் பேசியிருந்த வீடியோவும் வெளியானது.



இதனையடுத்து தான் இச்சம்பம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரப்பினை ஏற்படுத்திய நிலையில், மத்தியப்பிரதேச போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.  இதோடு மட்டுமின்றி குழந்தைகளை வலுக்கட்டாயமாக இந்த வழிபாடுகளை மேற்கொள்ள வைத்த விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் ஆணையம் அறிக்கைக் கேட்டுள்ளது. எனவே போலீசார் விசாரணைணையை துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும் இவ்விவகாரம் குறித்து பேசிய தமோ மாவட்ட ஆட்சியர், இதுவரை எந்தப்புகாரும் கிராமத்தினர் தரப்பிலிருந்து  வரவில்லை எனவும், இதுக்குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இதோடு இதுப்போன்ற மூட நம்பிக்கையிலிருந்து விடுபட விழிப்புணர்வும் நடத்தப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் சிறுமிகளை வைத்து நிர்வாண வழிபாடுகளை செய்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூட நம்பிக்கைகளை மக்கள் விடுவதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் கருத்துக்களை பலர் தெரிவித்து வருகின்றனர்.