தமிழ்நாட்டின் பாஜக தலைவாராக உள்ள எ.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர்.




முன்னதாக, மத்திய பாரதிய ஜனதா அரசு தனது புதிய அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த எல்.முருகன் இதில் மத்திய அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர். மேலும் இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். ஒருவாரத்துக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டிருந்த எல்.முருகன் பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டவர்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.