கொல்கத்தாவை சேர்ந்த பாடகியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வழக்கு பின்னணி :
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தக்ஷிந்தரி என்னும் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 12 ) அப்பகுதியை சேர்ந்த கிராமிய பாடகி ஒருவர் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது திடீரென கனமழை பெய்ததால் , ஓரளவு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள ஒரு கொட்டகையில் மழையிலிருந்து தஞ்சம் அடைந்தார். அந்த சமையத்தில் அங்கு வந்த வாகன ஓட்டுநர் ஒருவர் , கூர்மையான ஆயுதத்தை ஏந்தி அந்த பெண்ணை மிரட்டி தன்னுடன் வரும்படி மிரட்டியுள்ளான். வலுக்கட்டாயமாக அருகில் உள்ள கால்வாய் பகுதிக்கு அப்பெண்ணை அழைத்துச்சென்ற அந்த ஓட்டுநர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து , நகை மற்றும் கையில் வைத்திருந்த பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டான்.
லஞ்சம் கொடுத்த காவல்துறை :
பாதிக்கப்பட்ட பெண் அரசு உதவி பெறும் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டிற்கு ஓடிச்சென்ற பெண் , உடல்நிலை சரியில்லாமல் இரண்டு நாட்கள் சிகிச்சை எடுத்துள்ளார். அதன் பிறகு உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தபொழுது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யாமல் , 1000 ரூபாய் பணம் தருகிறோம் , இதனை இப்படியே விட்டுவிடும்படி கூறியதாக தெரிகிறது.ஆனால் பாடகியின் குடும்ப உறுப்பினர்கள் காவல்துறை தலைமையகம் மற்றும் ஊடகங்களை அனுகி நியாயம் கேட்கவே விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
குற்றவாளி கைது :
விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் வடக்கு கொல்கத்தாவில் உள்ள உல்டடாங்கா பகுதியில் உள்ளூர் வேன் டிரைவர் என்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பாடகி தற்போது குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளார். விரைவில் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் பிரியபிரதா ராய் தெரிவித்துள்ளார்.மகளிர் காவல் நிலையத்தின் காவலர்கள் மீதான லஞ்சப் புகார்கள் குறித்து நகர காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து வாய் திறக்கவில்லை, இருப்பினும் அதன் பொறுப்பாளர் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்