கேரளா மாநிலம் கண்ணூர் அருகே ஷைஜா என்ற பெண் மீசை வளர்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் கண்ணூர் சோலையாடு பகுதியில் வசிப்பவர் 34 வயதான ஷைஜா. இவர் பெண்ணாக இருந்தாலும் இவரது முகத்தில் சிறுவயது முதலே மீசை வளர்க்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஷைஜாவை பலரும் கிண்டல் செய்து வந்துள்ளனர். தொடர்ச்சியாக இவருடைய முகத்தில் அதிக அளவு முடிகள் வளர்ந்து வந்ததால், இவரை சுற்றியுள்ளவர்களின் கேலி நாளுக்குநாள் மீசையுடன் சேர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.
இதை ஷைஜா நீக்க எவ்வளவோ முயற்சி செய்தும், மருந்துகளை உட்கொண்டும் அந்த மீசை நீங்கியதாக தெரியவில்லை. ஒரு கட்டத்தில் தனக்கு ஆண்டவன் கொடுத்த மீசை ஒரு சிறந்த பரிசு என கருதி மீசை வளர்ப்பதில் அதிக கவனம் எடுத்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க : Kallakurichi Violence: நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; அமைதி காருங்கள்: மாணவி விவகாரத்தில் முதல்வர் வேண்டுகோள்!
இந்நிலையில் பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. பெண் பார்க்க வரும்போதே, லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் திருமணத்துக்குப் பின்னரும் நான் மீசை வைத்து கொள்வேன் என ஷைஜா கோரிக்கை வைத்துள்ளார். அப்பொழுது அவரது வருங்கால கணவரும் 'நீ மீசை வளர்ப்பது எனக்கு சந்தோசம் தான், நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன்' எனகூறி உள்ளார்.
கண்ணூரில் வசித்த ஷைஜா, திருமணத்துக்குப் பின் பாலக்காட்டில் உள்ள கணவன் வீட்டுக்கு வந்தார். நாளடைவில் மீசை ஷைஜா வளர்ப்பதற்கு வரவேற்பு அதிகரித்து விட்டது. ஷைஜா தற்போது திருப்பூர் நகரில் உள்ள பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து பணம் ஈட்டி வருகிறார் என்றும், இவரை இப்போது அப்பகுதி மக்கள் மீசை ஷைஜா என கூறி அழைத்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்