சட்டத்துறை அமைச்சர்  கிரண் ரிஜிஜூ அண்மையில்  அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் மாவட்டத்திற்கு சென்றார். தற்போது அங்கு கடும் குளிர் நிலவி வரும் சூழ்நிலையில், அதிகமான பனி பொழிந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு சென்ற அமைச்சர் காரை விட்டு கீழே இறங்கியதோடு, அங்கிருந்த பாதுகாப்பு வீரர்களுடன் அந்தக் கடும் பனியில் நடந்தும் சென்றார். 


இதுமட்டுமன்றி அங்கிருந்த கார்கள் செல்லவும் அவர் உதவினார். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர், “ இந்த நேரத்தில் தவாங் மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஒரு அறிவுரை. அருணாச்சலப்பிரதேசம்  பைசாகி சேலா கணவாய் மற்றும் நுரானாங் இடைப்பட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. அதனால் இங்கு வரும் பயணிகள் முன்னதாகவே முறையான தகவலை பெற்று சுற்றுலா வாருங்கள். ஏனென்றால் இந்த நேரத்தில் அங்குள்ள சாலைகளில் பயணம் செய்வது மிக ஆபத்தானது. இங்கே உள்ள வெப்பநிலை -25 டிகிரி செல்சியஸ் வரை கூட குறைகிறது.” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்