Kollam Child Abduction: குழந்தையை கடத்திவிட்டு தமிழ்நாட்டிற்கு தலைமறைவாக முயற்சியா? 3 பேரை தட்டித்தூக்கிய மலபார் போலீஸ்

Kollam Child Abduction: கொல்லத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக தமிழகத்தின் தென்காசியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவரை போலீஸார் இன்று அதாவது டிசம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Continues below advertisement

கேரளாவின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ள விவகாரம் என்றால் அது கொல்லம் பகுதியில் ஒரு குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாகத்தான். இதனால் கேரளாவின் மூலை முடிச்சுகளில் எல்லாம் பெற்றோர்கள் மிகவும் கவனாம உள்ளனர். குறிப்பாக தங்களது குழந்தைகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிகையாகவும் உள்ளனர். 

Continues below advertisement

கொல்லத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக தமிழகத்தின் தென்காசியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவரை போலீஸார் இன்று அதாவது டிசம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இந்த மூவரும் கொல்லத்தில் உள்ள சாத்தன்னூரைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லம் நகர போலீஸ் கழிஷனர் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளிடமிருந்து இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆறு வயது சிறுமியின் தந்தையுடன் ஏற்பட்ட நிதி தகராறு கடத்தலில் முடிவடைந்துள்ளதாக போலீஸாரின் முதல் கட்டத விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கொல்லத்திற்கு அருகே உள்ள ஓயூரைச் சேர்ந்த அபிகாயில் சாரா ரெஜி, திங்கள்கிழமை மாலை அதாவது நவம்பர் 27ஆம் தேதி தனது எட்டு வயது அண்ணனுடன் டியூஷன் வகுப்புக்குச் சென்றபோது கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தையைக் காணவில்லை என்பதை உணர்ந்த பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் திரைப்பட பாணியில் நடந்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மொபைல் டவர் இருப்பிடத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் விசாரணைக் குழு கண்டுபிடித்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

தென்காசி புளியரையில் உள்ள உணவகத்தில் இருந்து குழந்தையைக் கடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் வெள்ளிக்கிழமை அதாவது டிசம்பர் 1ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் போலீஸார் பிடித்துள்ளனர். ஊடகங்களில் வெளியான தகவலின்படி தந்தை-மகள் இருவரையும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சாத்தன்னூரை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

நவம்பர் 27ஆம் தேதி கொல்லம் ஓயூரில் இருந்து தனது சகோதரனுடன் டியூஷன் சென்டருக்குச் சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் வெள்ளை நிற காரில் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட  பின்னர் சுமார் 21 மணி நேரத்திற்குப் பிறகு குழந்தை கொல்லம் மாவட்ட மாநகரின் மத்தியில் உள்ள ஆசிரமம் மைதானத்தில் கேட்பாரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

ஏற்கனவே ஒரு மோசடி வழக்கிற்கும் சிறுமியின் தந்தை ரெஜிக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரெஜி குற்றச்சாட்டுகளை நிராகரித்தது மட்டும் இல்லாமல், சாத்தனூரைச் சேர்ந்த யாருடனும் தான் தொடர்பு கொள்ளவில்லை என்றும் காவல் துறையிடம் உறுதி அளித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola