ஒடும் ஆட்டோவில் இருந்து விழுந்த குழந்தையை  போக்குவரத்து  காவலர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மனித நேயம் :தினம்தோறும் எத்தனையோ சம்பவங்கள் , சாலை விபத்துகள் நம்மை பதைபதைக்க வைப்பதாக இருக்கிறது.எதிர்பாராத  சம்பவங்கள் அரங்கேறும் பொழுது சூப்பர் ஹீரோக்கள் போல சில எங்கிருந்தோ வந்து திடீரென உதவுவார்கள். அப்படியான நிறைய சம்பவங்களை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்த குழந்தை ஒன்று , ஆட்டோவை திருப்பும் தருவாயில் கீழே விழுந்து விடுகிறது. குழந்தைக்கு பின்னால் ஒரு தனியார் பேருந்து வருவதையும் நாம் காண முடிகிறது. குழந்தை விழுவதை பார்த்த பேருந்து ஓட்டுநர் வாகனத்தை உடனே நிறுத்தி விடுகிறார். என்றாலும் கூட அதனையெல்லாம் பொருட்படுத்தாத போக்குவரத்து காவலர் , திடீரென முந்திச்சென்று , கீழே விழுந்த குழந்தயை தூக்கி அணைத்துக்கொண்டார். அதே நேரத்தில் ஆட்டோவில் இருந்து இறங்கிய பெண்மணி ஒருவரிடம் அந்த குழந்தையை காவலர் ஒப்படைக்கிறார். 


வீடியோ :






சிசிடிவியில் பதிவான அந்த வீடியோவை அவினாஸ் ஷரன் என்னும் நபர் டிவிட்டரில் ஷேர் செய்திருக்கிறார். பதிவுகள் பகிரப்பட்டதன் அடிப்படையில் குழந்தையை காப்பாற்றிய காவலரின் பெயர் சுந்தர் லால் என்பது தெரிய வந்துள்ளது.16 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ ட்விட்டரில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. தனது உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய காவலர் சுந்தர் லாலுக்கும் ,கவனத்துடன் செயல்பட்ட  பேருந்து ஓட்டுநரையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.






குவியும் வாழ்த்துக்கள் :






“இவரைப் போன்ற தன்னலமற்ற மனிதர்களால்தான் மனிதநேயம் நிலைத்து நிற்கிறது. எங்கள் துணிச்சலான மண்ணின் மகனும், எங்களின் பெருமையுமான சுந்தர் லால் ஜிக்கு பாராட்டுக்கள்! மாநில அரசும், காவல் துறையும் அவருக்கு தகுந்த வெகுமதி அளிக்கும் என நம்புகிறேன்." என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.