கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில், மாணவர்கள் 3 பேர் மாணவிகளிடம் ஈவ் டீசிங் செய்துள்ளனர். அப்போது, அங்கிருந்த ஒரு மாணவரும், ஒரு மாணவியும் ஈவ் டீசிங் செய்த மாணவர்களை கண்டித்துள்ளனர்.


ஈவ் டீசிங் செய்த மாணவர்களை கண்டித்ததால், மாணவ மற்றும் மாணவியின் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இச்சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல மாணவிகள், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தங்களது தலைமுடிகளை வெட்டி கொண்டனர். 


ஆரம்பத்தில், குறைந்த நபர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், சிறிது நேரம் கழித்து பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து, இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர், ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 3 பேரை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், தலைமுடிகளை வெட்டி கொண்டு எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் வீடியோவானது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 






Also Read: Ripon Building: மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஒளிரும் சென்னையின் முக்கிய இடங்கள்!


Also Read: Ma Subramaniyan: அரசு மருத்துவமனை லிஃப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்ரமணியன்... 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்