Kerala : கேரளாவில் ஒரே உணவகத்தில் சாப்பிட்ட 68 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கேரளாவில் நச்ச கலந்த உணவுப் பொருட்களை உண்பதால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படும் நிகழ்வு அதிகிரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக கேரள அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


68 பேருக்கு சிகிச்சை


கேரளா மாநிலம் ஏர்ணாகுளத்தில் மஜ்லிஸ் என்ற அரபியன் உணவகம் செயல்பட்டு வருகிறது.  அந்த உணவகத்தில் அல்-ஃபஹாம் மற்றும் ஷவாய் ஆகிய இரண்டு பிரபலமான அரபு உணவுகளை அங்கு வந்தவர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டனர். உட்கொண்ட சிறிது நேரத்திற்கு பின், அவர்களில் 68 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவர்களை ஏர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


வடபரவூர் நகராட்சி தலைவர் வி.ஏ.பிரபாவதி கூறுகையில், ” 68 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மஜ்லிஸ் என்ற ஹோட்டலுக்கு மூடப்பட்டுவிட்டதாகவும், அதற்கு முன் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ததாக தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஏர்ணாகுளத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளனர்.  தேர்வுக்கான கடைசி நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக அரபியன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு உள்ளனர்.  இதனை அடுத்து, சாப்பிட்ட 68 பேருக்கு உடல் நலக்கு குறைவு ஏற்பட்டது. அவர்களில் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக” தெரிவித்தார்.


முன்னதாக, 


சில நாட்களுக்கு முன், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அசைவ மயோனைஸ், பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கேரள மாநிலத்தில் கேட்டரிங் சேவைகளுக்கு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அம்மமாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.


அனைத்து உணவுப் பொட்டலங்களிலும் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். உணவகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளால் சுகாதார அட்டைகள் வழங்கப்படும். அனைத்து உணவகங்களில் ஆய்வு நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு மூலம் அனைத்து உணவகங்களிலும் ஆய்வு நடத்தப்படும். மேலும், மக்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருந்தார். 


விசாரணை நடத்த உத்தரவு


இந்நிலையில் கடந்த திட்கட்கிழமை ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 68 பேருக்கு  வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை வழங்கும் நிறுவனங்கள் அல்லது உரிமம் இல்லாமல் செயல்படும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு துறைக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.