Sabarimala : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்களின் புகைப்படங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


சபரிமலையில் பேனர் வைத்த ரசிகர்கள்


வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் ஒரே நாளில் நாளை வெளியாகிறது. பொதுவாக, உச்சநட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது,  அதனின் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும்.  நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் 8 ஆண்டுகளுக்கு பின், அவர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் இரண்டு திரைப்படத்துக்கு சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் முடிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருதரப்பு ரசிகர்களும் படத்திற்காக விளம்பரங்களையும், பேனர்களை வைத்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி, அண்மையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படம் வெற்றி பெற வேண்டி பேனர் வைத்து வழிபாடு செய்தனர். அவர்களுக்கு சரிசமமாக அஜித் ரசிகர்களும் துணிவு படம் வெற்றி பெற வேண்டி பேனர் வைத்து வழிபாடு செய்தனர். இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரித்தனர்.


புகார்


இந்த நிலையில், டிரம்ஸ் உபகரணங்களை சன்னிதானத்தில் இசைக்க தடை விதிக்க கோரியும், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்களின் படங்களை சபரிமலைக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்க வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து, தாமாக முன்வந்து கேரள உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. இதை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் பிஜி அஜித்குமார் ஆகியோரின் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.


அதிரடி உத்தரவு


மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், "சபரிமலை கோயில் சன்னிதானத்தில் டிரம்ஸ் இசைக்கருவிகளை இசைக்க தடை விதித்தும், அரசியல், சினிமா பிரமுகர்களின் படங்களை பக்தர்கள் சபரிமலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும், ”சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வழிபாடு செய்ய உரிமை உள்ளது. ஆனால் அது கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு எதிராக இருக்க கூடாது" என நீதிபதிகள் அனில் கே நரேந்திரன் மற்றும் பிஜி அஜித்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.




மேலும் படிக்க


Rahul Gandhi : ’நான் ராகுல் காந்தியை கொன்றுவிட்டேன், அவர் இப்போ இல்லை’: செய்தியாளர்களுக்கு ஷாக் கொடுத்த ராகுல் காந்தி