Kerala Loan : கேரள அரசுக்கு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதியளிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு..

மத்திய அரசுக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்த வழக்கில், கேரள அரசுக்கு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதியளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

கேரள அரசு, ரூ. 10,000 கோடி கடன்  வாங்க அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Continues below advertisement

கேரளாவில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள அரசு கடன் வாங்க மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு மத்திய அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து மாநிலத்தின் நிதி நிலவரத்தை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு இருக்கும் பிரத்யேக, தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டி, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த, கே.வி விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கேரள அரசு தரப்பில் கபில் சிபில் ஆஜரானார்.

அப்போது, மாநில அரசு வாங்கும் கடனுக்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் அப்படி நிபந்தனை விதிக்கக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்னைகளை விசாரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் 131-ஆவது பிரிவு படி, உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கிறது. இது தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களில் நிதி நிர்வாகத்தில் மறைமுக கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் கேரள அரசு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola