கேரளாவை அடுத்த காக்கநாடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வேகமாக தடுப்பு சுவரில் மோதி சுக்குநூறாய் உடையும் வீடியோ காட்சி வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கார் தடுப்பு சுவரில் மோதி இரண்டு காவலர்கள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மதியம் காக்கநாடு இன்போபார்க் சாலை வழியாக காவல்துறை அதிகாரிகள் சென்று கொண்டிருந்தபோது ஒரு கட்டுப்பாட்டை இழந்த கார், ஸ்கூட்டர் மற்றும் இன்டர்லாக் தடுப்புகளை மோதி உடைத்த கார் சுவரில் மோதி நின்றது. காரில் ஸ்ரீலேஷ் (23), ஸ்ரீகுட்டன் (25) ஆகியோர் பலத்த காயமடைந்தனர், அவர்களில் ஒருவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பின்னால் இருக்கையில் இருந்த விவேக் காயமின்றி உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
நன்றி : english.mathrubhumi
இன்போபார்க் நிலையத்தைச் சேர்ந்த வி.என்.செல்வராஜ் மற்றும் கே.பி.வினு ஆகிய போலீஸ் அதிகாரிகள், முன்பு இங்கு நடந்த ஒரு விபத்தின் சிசிடிவி காட்சிகளை சேகரித்து இந்த காட்சிகளை வெளியிட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் ஸ்கூட்டரில் ஸ்டேஷனுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து அவர்களுக்கு முன்னால் வேகமாகச் சென்றது. இந்த விபத்தில் இருந்து அதிகாரிகள் மயிரிழையில் உயிர் தப்பினர். இன்டர்லாக் தடுப்பு சுவர் உடைந்து மேலே பட்டத்தில் காவல்துறை அதிகாரி செல்வராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து மற்றொரு காவல்துறை அதிகாரியான வினு தெரிவிக்கையில், “யாரோ திடீர் பிரேக் போடும் சத்தம் கேட்டது. அப்போது எங்கிருந்தோ கார் வந்து எங்களைக் கடந்து சென்றது. காரை நிறுத்த முற்பட்டதால் அப்பகுதி முழுவதும் தூசி படிந்தது. இரண்டு நொடிகளுக்குப் பிறகுதான் என்ன நடந்தது என்பதை உணர்ந்தோம். உடனே, காரில் இருந்த இளைஞர்களை சோதனை செய்து மீட்க விரைந்தோம். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ” என்று தெரிவித்தார்.
எதிர்பாராத சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தாலும், போலீஸ் அதிகாரிகளும் இன்போபார்க்கின் பாதுகாப்பு அதிகாரியும் இளைஞரை காரை விட்டு இறங்க உதவினர். அவர்கள் மூவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக பயணிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கார்னிவல் வளாகத்தின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பெரும் சேதம் அடைந்தாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்