✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!

செல்வகுமார்   |  22 Sep 2024 03:50 PM (IST)

Kerala Nipah Virus Case: கேரளா மாநிலத்தில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாட்டு எல்லைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வைரஸ் தொற்று

கேரள மாநிலத்தில், மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கேரள மாநிலம் ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று

கேரள மாநிலத்தில் தற்போது மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவில் 'நிபா'வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் பணியில் அம்மாநில சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.கேரள மாநிலம் மலப்புரத்தில் 'நிபா' வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 9-ந்தேதி 24 வயது வாலிபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கேரளாவில் 'நிபா'வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் பணியில் அம்மாநில சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு:

இந்த நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 'நிபா' வைரஸ் பாதிப்பு அறிகுறிகளான கடுமையான தலைவலி, காய்ச்சல், உடல் வலி என நோய் பாதிப்பு அறிகுறிகளுடன் யாரேனும் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், தமிழக கேரளாவை ஒட்டியுள்ள  இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருக்கிறதா? எனக் கண்காணிக்க வேண்டும்.

குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டு 6 மாவட் டங்களின் எல்லைகளில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி சுகாதார அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் தீவிரமாக பரிசோதனை செய்து தமிழக பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தீவிர பரிசோதனை:

தேனி மாவட்டத்திலிருந்து கேரளா பகுதிக்கு குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய வழியாக வாகனங்களில் வரும் பொது மக்களையும் பயணிகளையும் தீவிரமாக பரிசோதனை செய்த பின்  அனுமதித்து வருகின்றனர். போடிமெட்டு வழியாக கேரளா செல்லும் முந்தல் சோதனை சாவடி அருகே பொது சுகாதாரத் துறை சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு போடிமெட்டு வழியாக போடிக்கு வரும் பயணிகளையும் பொதுமக்களையும் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் வாகனங்களுக்கு நோய் தடுப்பு மருந்துகளை தேய்த்தபின் உள்ளே நுழைய அனுமதித்து வருகின்றன. மருத்துவ முகாம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இங்கு முகாமில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரத் துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

Published at: 22 Sep 2024 03:42 PM (IST)
Tags: Kerala Virus Nipah virus Nipah kerala nipah virus
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.