ஒவ்வொருவருக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை இருப்பதால், குறைந்தபட்சம் தங்கள் வீடுகளில் கத்திகளைக் கூர்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்குர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம், போபால் தொகுதி எம்.பி.யாக பிரக்யா தாக்குர் இருந்து வருகிறார்.


ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து ஜாகரன வேதிகேயின் தென் மண்டல ஆண்டு மாநாட்டில் அவர் பேசுகையில், "கடவுளால் உருவாக்கப்பட்ட இவ்வுலகில், ஒடுக்குபவர்கள் மற்றும் பாவங்கள் அனைத்தையும் ஒழிக்க வேண்டும் என்று சன்யாசி கூறுகிறார், இல்லையெனில் காதலுக்கான உண்மையான விளக்கம் இங்கு நிலைக்காது. எனவே லவ் ஜிஹாத்தில் ஈடுபடுபவர்களுக்கு பதிலளிக்கவும். அதே வழியில், உங்கள் பெண்களைப் பாதுகாக்கவும், சரியான மதிப்புகளைக் கற்றுக்கொடுங்கள்"  என்றார்.


மேலும், சிவமொக்காவைச் சேர்ந்த ஹர்ஷா உள்ளிட்ட இந்து ஆர்வலர்கள் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்காப்புக்காக வீட்டில் கத்திகளைக் கூர்மையாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள், எதுவுமில்லை என்றால், காய்கறிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்திகளாவது, கூர்மையாக இருக்க வேண்டும். யாராவது நம் வீட்டிற்குள் புகுந்து தாக்கினால், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது நமது உரிமை.


இதைச் செய்வதன் மூலம் முதியோர் இல்லங்களின் கதவுகளை நீங்களே திறப்பீர்கள்." "...(மிஷனரி நிறுவனங்களில் கல்வி கற்பதன் மூலம்), குழந்தைகள் உங்களுக்கும் உங்கள் கலாச்சாரத்திற்கும் உரியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் முதியோர் இல்லங்களின் கலாச்சாரத்தில் வளர்ந்து சுயநலவாதிகளாக மாறுகிறார்கள்.


உங்கள் வீட்டில் பூஜைகள் செய்யுங்கள், உங்கள் தர்மம் மற்றும் சாஸ்திரத்தைப் பற்றிப் படியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு அதைப் பற்றிக் கற்றுக் கொடுங்கள், அதனால் குழந்தைகள் நமது கலாச்சாரம் மற்றும் விழுமியங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்" என்றார்.


முன்னதாக,


மத்தியப் பிரதேசத்தில் திருட்டில் ஈடுப்பட்டதாக இளைஞர்கள் இருவர் ட்ரக்கில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். கூட்டம் மிகுந்த காய்கறி சந்தை வழியாக இந்த இளைஞர்கள் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். அந்த இரு இளைஞர்கள் மீதும் திருட்டு வழக்கை பதிவு செய்த போலீஸார் அவர்களை கொடூரமாக கட்டி இழுத்துச் சென்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.


இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு வியாபாரிகள் மற்றும் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரித்ததில் அந்த இரு சிறுவர்களும் டிரக்கில் இருந்து பணத்தை திருடியதைப் பார்த்ததாகத் தெரிவித்தனர். சிறுவர்கள் இருவரும் அந்த டிரக்கில் இருந்து காய்கறிகளை இறக்கிவைக்கவே அழைக்கப்பட்டனர். ஆனால் அப்போது அவர்கள் ட்ரக்கில் இருந்த காசை திருடிவிட்டனர் என்று புகார் கூறினர். 


வியாபாரிகளும், சில வழிப்போக்கர்களும் கூட அந்த இருவரையும் தாக்கியுள்ளனர். அவர்கள் இருவரும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்தூரில் காய்கறி மார்க்கெட்டில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இந்தூர் போலீஸ் அதிகாரி நிஹித் உபாத்யாயா கூறுகையில், அவர்கள் இருவரும் நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. இரு சிறுவர்களையும் தரையில் முதுகுபடும்படி படுக்கவைத்து இழுத்துச் சென்றுள்ளனர். வீடியோவைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்போம் என்றார்.