கர்நாடகாவில் வன்கொடுமைக்குள்ளான பெண்ணைப் பற்றி பேசும்போது, காங்கிரஸ் என்னை ரேப் செய்கிறது. யாருமில்லாத அந்தப் பெண் ஏன் அங்கு போக வேண்டும் என இகழ்ந்து பேசியுள்ளார் கர்நாடக அமைச்சரான அரகா ஞானேந்திரா. தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சரின் கருத்துடன் உடன்படவில்லை எனக் கூறியிருக்கிறார்
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டிஸ்வரி மலைக்கோவிலுக்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மீண்டும் இரவு நேரத்தில் அந்த வழியாக மீண்டும் அவரது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போதுதான் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை வழிமறித்து பெண்ணின் நண்பரை தாக்கியதோடு, அப்பெண்ணினை காட்டுப்பகுதியில் வைத்து கூட்டுப்பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். பின்னர் இவர்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றபோது, அதிர்ச்சியில் மருத்துவனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இச்சம்பவம் குறித்து மைசூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு பெண்னை மர்ம நபர்கள் சேர்ந்து கூட்டுப்பலாத்காரம் செய்த நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியதோடு, பெண்ணிற்கு இம்மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் தான் இச்சம்வம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஏடிஜிபி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விரைவில் கூட்டுப்பலாத்காரத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்துவிடுவோம் என கர்நாடக அரசு தெரிவித்துவருகிறது.
இப்படி கர்நாடக மாநிலம் முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து அம்மாநிலத்தின் முன்னாள் மகளிர் ஆணையத்தலைவி மஞ்சுளா மானசா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையினை ஏற்படுத்தியதோடு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எப்படி என்ன பேசியுள்ளார் தெரியுமா? கூட்டுப்பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணினைப்பார்க்கும் போது வெட்கமும், வெறுப்பாகவும் உள்ளது என தெரிவித்த அவர் ஏன் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு இரவு நேரத்தில் செல்ல வேண்டும். அவர் ஒரு மேலாண்மை படிக்கும் மாணவியாக இருந்தாலும் அவருக்கென்று சில பொறுப்புகள் உள்ள நிலையில், ஏன் அதனை அவர் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகத்தின் பெண்கள் அமைப்பின் தலைவராக இருந்த ஒருவரே இச்சம்பம் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில்தான், பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி கூறுகையில், சில குற்ற சம்பவங்கள் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கவில்லை எனவும் இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசும் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்து வருகிறது. முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது நண்பர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது சிறிய விபத்து என்று கூறி இருந்தாகவும், ஆனால் சந்தேமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முன்னதாக, மைசூரில் கூட்டுப்பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை பார்க்கும்போது வெறுப்பாகவும், வெட்கமாகவும் உள்ளதாக கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மகளிர் ஆணையத்தின் தலைவி மஞ்சுளா மானசா தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது