கடந்த ஜூன் 10 ம் தேதி இயக்குநர் கிரண் ராஜ் இயக்கத்தில் கன்னட முன்னணி நடிகர் ரக்ஷித் ஷெட்டியின் நடிப்பில் 777 சார்லி திரைப்படம் வெளியானது. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு கதறி ஆளும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


777 சார்லி திரைப்படம் ஒரு தனி மனிதனுக்கும் அவனுடைய நாய்க்கும் இடையேயான பிணைப்பைக் கொண்டாடும் படமாகும். இந்த படம் கடந்த ஜூன் 10 ம் தேதி அன்று ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 






இந்தநிலையில், 777 சார்லி திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் (ஜூன் 13) கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தன் இறந்து போன நாயின் நினைவுவந்து கதறி அழுதுள்ளார். தொடர்ந்து, முதலமைச்சர் இது ஒரு படத்தை மிகவும் நேசித்ததாகவும், தயாரிப்பாளர்களைப் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அனைவரையும் பார்க்கும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நாய் அன்பு என்பது நிபந்தனையற்ற அன்பு, அது தூய்மையானது. நாய்களைப் பற்றிய திரைப்படங்கள் நிறைய வெளிவந்து இருந்தாலும், இந்த திரைப்படம் மனிதன் மற்றும் விலங்குகளுடனான உணர்ச்சியை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளது. அந்த நாயின் தத்ரூபமான நடிப்பு என் கண்களில் கண்ணீரை வரவைத்தது. அனைவரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். நான் நிபந்தனையற்ற அன்பை பற்றி எப்போதும் பேசுவேன்" என்று தெரிவித்துள்ளார். 


கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஒரு நாய் பிரியர். கடந்த ஆண்டு தனது செல்ல நாய் இறந்ததால் அவர் மனம் உடைந்துள்ளார். பசவராஜ் பொம்மை மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் செல்ல நாயை இழந்த புகைப்படம் பின்வருமாறு : 





கே கிரண்ராஜ் இயக்கத்தில், 777 சார்லி ஒரு சாகச நகைச்சுவை நாடகம். இப்படத்தில் ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பரம்வா ஸ்டுடியோவின் கீழ் ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜி.எஸ்.குப்தா தயாரித்துள்ளனர். இது அனைத்து விலங்குகள், குறிப்பாக நாய் பிரியர்களுக்கான படம். மனிதனுக்கும் செல்ல நாய்க்கும் இடையே உள்ள பிணைப்பை படம் அழகாக வெளிப்படுத்தியுள்ளது. 


777 சார்லி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண