வரலாற்றுச் சிறப்புமிக்க கார்கில் போர் இந்திய வரலாற்றில் என்றும் நினைவுகூரப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இமயமலை உச்சிகளை இந்திய ராணுவம் போராடி மீட்டது. உயிர் தியாகம் பெற்ற வெற்றியை கார்கில் விஜய் திவாஸாக கொண்டாடப்படுகிறது. 


கடந்த 1999 ம் ஆண்டு காரில் போரின்போது நாட்டிற்காக தியாகம் செய்த இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி நாடு முழுவதும் கார்கில் விஜய் திவாஸ் தினம் கொண்டாடப்படுகிறது. 


பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் விஜய்’ ஊடுருவும் நபர்களை விரட்டியடுத்து டைகர் ஹில் மற்றும் பிற புறக்காவல் நிலையங்களை மீட்டது. லடாக்கில் உள்ள கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக சுமார் 18,000 அடி உயரத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், கார்கில் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றன. 


கார்கில் விஜய் திவாஸ் 2023 வாழ்த்துகள்:


மனதில் சுதந்திரம், வார்த்தைகளில் நம்பிக்கை, இதயத்தில் பெருமை. ஜெய் ஹிந்த்..! கார்கில் விஜய் திவாஸ்!


நாட்டிற்காகவும், மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உயிர் தியாகம் செய்த துணிச்சல் மிக்க இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள். கார்கில் விஜய் திவாஸ் 2023!






1999 பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது இந்திய ராணுவ வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்கிறோம். ஜெய் ஹிந்த்..! கார்கில் விஜய் திவாஸ்!






இரவும், பகலும் நம்மைப் பாதுகாத்து வீரரை தியாகம் செய்த நமது வீரர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துவோம். இந்த நாளில் அவர்களது போராட்டங்களையும், உழைப்பையும் நினைவு கூர்வோம். ஜெய் ஹிந்த்..! கார்கில் விஜய் திவாஸ்!






காற்று அசைவதால் நமது கொடு பறக்காது, அதை பாதுகாத்து இறந்த ஒவ்வொரு வீரரின் இறுதி மூச்சிலும் பறக்கிறது. கார்கில் விஜய் திவாஸ் 2023!