தமிழ்நாடு:
- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 9 பேரையும், படகையும் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- செந்தில் பாலாஜி காவல் குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும்: உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
- வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்
- விளையாட்டுத்துறையின் செயல்பாடுகளை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
- காஞ்சிபுரம் டே பை டே நிறுவனம் 24 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
- தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு 812 ஓட்டுநர்கள், நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- மணிப்பூரில் நடந்த கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது. கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் - திருமாவளவன்
- ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறும் மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- ஆவின் பால் பொருட்களின் விலை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா:
- இந்தியா என்ற பெயரின் மீது பிரதமர் மோடி தாக்கு : ராகுல் காந்தி பதிலடி
- மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் : எதிர்க்கட்சிகள் முடிவு
- கர்நாட்க காங்கிரஸ் அமைச்சர்களுக்கு எதிராக 20 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு கடிதம் - சமாதானப்படுத்தும் முயற்சியில் சித்தராமையா தீவிரம்
- கர்நாடகாவில் பருவமழையை எதிர்கொள்ள தயார் என முதலமைச்சர் சித்தராமையா தகவல்
- மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள ஒரு கடையில் பெண்ணிடம், ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நான்கு கட்டங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
- தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு 6 மணி நேரத்துக்குப் பின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் செயல்பட தொடங்கியது.
- அரிசி ஏற்றுமதியை நிறுத்துவதாக வெளியான இந்தியாவின் அறிவிப்பால் சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பின்மை ஆபத்தை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
உலகம்:
- இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் ஆக.8 வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மணிப்பூரின் கொடூரமான பாலியல் வன்கொடுமை வீடியோவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
- கிரீஸ் நாட்டில் பரவி வரும் காட்டுத்தீயால் 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
விளையாட்டு:
- தேசிய கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு அணிக்கு முதலமைச்சர் ரூ. 60 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், ஸ்ரீகாந்த் 2 வது சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
- சென்னையில் சாம்பியன்ஸ் கோப்பை டிராபி: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு.
- 2023-24 ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் அட்டவணை வெளியீடு