ராகுல் காந்தியில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். 


கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சரின் அறிவுரைக்கு மத்தியில் ராகுல் காந்தி டெல்லியில் யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 


இந்தநிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனும் டெல்லியில் இன்று யாத்திரையில் கலந்துகொண்டார். ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் அணிவகுத்து சென்றனர். 


அதன்பிறகு யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், “ ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்தில் 2 கொள்ளுப்பேரன்கள் இணைந்து நடக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது எனக்காக அல்ல" என்று தெரிவித்தார். அப்போது இடைமறித்த ராகுல் காந்தி தமிழர்கள் இங்கு இருக்கிறார்கள், ஆகையால் நீங்கள் தமிழ் பேசுங்கள் என்று கமல் ஹாசனிடம் கோரிக்கை வைத்தார். 






இதையடுத்து தமிழில் கமல்ஹாசன் பேச தொடங்கிபோது, “ தமிழில் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி என்னை கேட்டுக்கொண்டு இருக்கிறார். அதனால் அவரை என் சகோதரராக ஏற்றுக்கொண்டேன் என்று இல்லை. இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் இணைந்து நடக்கும் யாத்திரை. இவர் நேருவின் கொள்ளுப்பேரன். நான் காந்தியின் கொள்ளுப்பேரன். 


எந்தவொரு நெருக்கடி நம் அரசிலமைப்புக்கு வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். எந்த கட்சி ஆள்கிறது என்பது பற்றி எனக்கு கவலையில்லை. நான் அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். நான் முதலில் ஆங்கிலத்தில்தான் பேசுவதாக இருந்தேன், சகோதரர் கோரிக்கையால் தமிழில் பேசுகிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பு பல பேர் என்னிடம் சொன்னார்கள். நான் ஒரு கட்சியின் தலைவன், நீங்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டால் உங்கள் அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என தெரிவித்தார்கள். அப்போது நான் சொன்னேன் எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது எனக்காக அல்ல. 


நான் கண்ணாடி முன் நின்று எனக்குள் சொல்லிக் கொண்டேன் - இது நாட்டுக்கு என்னை மிகவும் தேவைப்படும் நேரம். அப்போது எனக்குள் இருந்து ‘கமல்... இந்தியாவை உடைக்க உதவாதீர்கள், ஒன்றிணைய உதவுங்கள்” என்று தெரிவித்தார். 


ராகுல் காந்தி யாத்திரை: 


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் யாத்ராவை கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். இன்று தொடங்கிய பயணம் இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களை கடந்து டெல்லியில் நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. 


ஏறக்குறைய 3,000 கி.மீ தூரத்தை கடந்து 12 மாநிலங்களில் பயணம் முடிந்து இன்னும் 5,70 கி.மீ மிச்சம் இருக்கிறது. இந்த பயணமும் வருகிற ஜனவரி மாதம் இறுதியில் முடிவடைய இருக்கிறது.